தமிழ் சினிமாவில் இஷ்டம் என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை ஸ்ரேயா சரண். இவருக்கு என்று ரசிகர்கள் கூட்டம் அதிகம். இவர் பல வெற்றி படங்களை தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார். மேலும் இவர் இஷ்டம் படத்தினை தொடர்ந்து எனக்கு 20 உனக்கு 10 என்ற படத்தில் நடித்தார். அதன் பிறகு அஜித், விஜய், தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, இங்கிலிஷ், கன்னடம் போன்ற மொழிப்படங்களில் நடித்துள்ளார்.
மேலும் இவர் 70 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் இவர் தன்னுடைய திருமணத்திற்கு பிறகு பெரிதளவில் சினிமாவில் நடிக்கவில்லை என்றே சொல்லலாம். இவர் டென்னிஸ் வீரர் மற்றும் தொழிலதிபர் அண்ட்ரீ என்பவரை காதலித்து ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். இவர் பொதுவாகவே தன்னுடைய பர்சனல் லைப் பற்றி சோசியல் மீடியாவில் எதுவும் ஷேர் செய்யமாட்டார் என்றெ சொல்லலாம்.
இவர்களது திருமணம் சில மாதங்களுக்கு பிறகு தான் தெரிய வந்தது என்றே சொல்லலாம். மேலும் இவர்களுக்கு குழந்தை பிறந்ததும் லேட் ஆக தான் வெளியில் சொன்னார். இந்நிலையில் இவரின் சிறு வயது போட்டோஸ் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
pic1
pic2
pic3