தமிழ் சினிமாவில் பிரபலம் ஆனவர் நடிகை வனிதா விஜயகுமார் . இவர் பிக் பாஸ் 3 ல் போட்டியாளராக கலந்து கொண்டு அதன் மூலமாக மிகவும் பிரபலம் ஆனார். சோசியல் மீடியாவில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்க கூடியவர். மேலும் இவர் எப்போது பேட்டியளித்தாலும் இவருடைய பதில்கள் எல்லாம் மிகவும் சுவாரசியமானதாக தான் இருக்கும். இவர் இறுதியாக நடித்த படம் அந்தகன். அந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சினிமா பிரபலங்களின் போட்டோஸ்கள் அவ்வப்போது இணையத்தில் வைரல் ஆகி கொண்டிருக்கும். அந்த வகையில் தற்போது நடிகை வனிதா சிறு வயது போட்டோஸ் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. அவர் அவருடைய முதல் பிறந்த நாளில் எடுத்த போட்டோஸ்களை அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இது பழைய பதிவாக இருந்தாலும் அந்த போட்டோஸ்கள் தற்போது வைரல் ஆகி வருகிறது.
அவருடைய ,முதல் பிறந்த நாளைக்கு நடிகர் சிவாஜி கணேசன் அவரை கையில் தூக்கி வைத்திருப்பது போன்ற போட்டோ மாற்று அவருடைய அம்மா மற்றும் அப்பாவுடன் எடுத்து கொண்ட போட்டோஸ்களை பதிவிட்டிருந்தார். இதனை பார்த்த ரசிகர்கள் வனிதாவா இது என ஆசரியத்தில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.