Site icon

ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி விட்ட சிறுத்தை சிவா… 5-வது முறையாக தல அஜித்துடன் கூட்டணி…

தல அஜித் அவர்களின் நடிப்பில் தற்பொழுது விடாமுயற்சி படம் ஷூட்டிங் நடந்து முடிந்து உள்ளது.இதனைத்தொடர்ந்து அவர் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார்.இதில் அவர் உடம்பு முழுவதும் டாட்டூஸ் போட்டு கொண்டு வித்தியாசமாக வருவதுடன் மிக இளமையாகவும் இருக்கும் புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார்.

இதனை தொடர்ந்து கங்குவா படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் சிறுத்தை சிவா அவர்கள் கூறியதாவது குட் பேட் அக்லி படம் ஷூட்டிங் முடிந்த உடன் நான் அஜித் அவர்களிடம் ஒரு கதை கூறியுள்ளேன் அதை தொடங்க போகிறோம் இதை நான் அறிவிப்பதை விட அஜித் அவர்களை கூறுவார் என்று சொல்லியுள்ளார்.

இதற்குமுன் இவர்களின் கூட்டணியில் வெளியான அனைத்து படமுமே வெற்றி கொடுத்த நிலையில் ரசிகர்கள் அடுத்த படத்தின் வெளியீட்டிற்கு மிக ஆர்வமுடன் இருக்கிறார்கள்.

Exit mobile version