நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் வெளிவந்த படம் தான் புஷ்பா. இந்த படத்தில் நடிகை ரஷ்மிகா, பகத் பாசில், சுனில் அனுஷியா உட்பட பலர் நடித்துள்ளனர் இந்த படம் செம்மர கடத்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டது. மேலும் இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி மொழிகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. முதல் பாகம் வெற்றி அடைந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்பட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் புஷ்பா 2 திரையரங்குகளில் நேற்று வெளிவந்த நிலையில் முதல் நாளே வசூலில் சாதனை படைத்தது வருகிறது. இந்நிலையில் FDFS என்னும் முதல் காட்சி ரசிகர்களுக்காக சந்தியா திரையரங்கில் போடப்பட்டது. ரசிகர்கள் கூட்டம் அலைமோதிய நேரத்தில் நடிகர் அல்லு அர்ஜுனும் அங்கு திடீரென வந்தார். அவரை பார்ப்பதற்கு என்று உடனே ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். இந்த கூட்ட நெரிசலில் குழந்தையை கூட்டிட்டு வந்த ஒரு பெண் பலியானார். எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் அல்லு அர்ஜுன் வந்தது தான் இதற்க்கு கரணம் என்று அவர் மீது கிரிமினல் கேஸ் பைல் செய்யப்பட்டுள்ளது.
அல்லு அர்ஜுன் படத்தினை போன்று தமிழ் நாட்டில் சூப்பர்ஸ்டார் படமும் கொண்டாடப்படும். அனால் ரஜினியோ படம் பார்ப்பதற்கு தலைப்பாகை அணிந்தோ முக கவசம் போட்டுக்கொண்டோ தான் செல்வர். யாரும் ரஜினி தான் என்று கண்டுபிடிக்காத அளவில் வந்து செல்வார். படம் பார்ப்பதற்க்கு மாறு வேடத்தில் வருவார். அல்லு அர்ஜுனும் ரஜினியை போல் கற்றுக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகின்றன்ர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.