திருடர்கள் முதலில் வந்தார்களா? காவல் நிலையம் முதலில் உருவானதா? என்பதே பெரிய கேள்வி. இந்த உலகில் திருடர்களாக பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்கவே முடியாது என்னும் பாடல் வரிகள் ரொம்ப பிரசித்தி. திருட்டு ஒழியப்பட வேண்டுமானால் அதற்கு திருடர்கள்தான் மனம் வைத்து திருந்த வேண்டும்.
இன்றைய உலகில் திருட்டுத்தான் பிரதானமாகி விட்டது. அதனால் தான் பெரியவர்கள் தங்கள் குழந்தைகளிடம் சின்ன வயதிலேயே திருடக்கூடாது என்பதை சொல்லி வளர்க்கிறார்கள். பொதுவாக நாம் மனிதர்கள் தான் திருடுவார்கள் என்பதாக புரிந்து கொள்கிறோம். ஆனால் மனிதர்கள் தான் என்று இல்லை. பிராணிகளிடமும் இந்தத் தன்மை அதிகம்.
ஏன் நம் வீட்டுக்குள் லாவகமாகப் புகுந்துகொள்ளும் பூனை யாரும் பார்க்காவிட்டால் பாலை குடித்துவிட்டு ஓடிவிடுகிறது தானே? இதோ இங்கே உலகையே வியக்க வைத்த டாப் 15 திருட்டுகள் தொகுக்கப்பட்டுள்ளது. இதோ இந்த வீடியோவை நீங்களே பாருங்களேன். மனிதர்கள் மட்டுமல்ல பிராணிகளும் திருட்டில் செம கெட்டிதான் எனச் சொல்வீர்கள். இதோ அந்தக் காணொலி…