இசை மீது உள்ள காதலால் தன்னுடைய படிப்பையும் விட்டுவிட்டு இசைப்பயணத்தை மேற்கொண்டவர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவர் தமிழ்,தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையலாம் என அணைத்து மொழிகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார்இந்நிலையில் இவருக்கும் இவரது மனைவி சாராக்கும் திருமணம் நடந்து 29 ஆண்டுகள் ஆன நிலையில் தற்போது அவர்கள் விவாகரத்து செய்வதாக அறிவித்துள்ளனர்.
அதாவது ஏ.ஆர்.ரகுமானின் மனைவி சாரா தான் இந்த அறிவிப்பை அறிவித்து உள்ளார். நல்ல படியாக நடந்து கொண்டிருந்த இவர்களது 29 வருட வாழ்க்கையில் புயல் அடித்தது போன்று விவாகரத்து என்ற முடிவு வந்தது ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக உள்ளது.இந்நிலையில் இவரின் அசிஸ்டன்ட் ஆன பாடகி மோஹினி டேவும் தன்னுடைய கணவரான மார்க்கை பிரிய இருப்பதாக அறிவித்துள்ளார். 28 வயதான இவர் பல இசையமைப்பாளர்கள் உடன் இணைந்து பணியாற்றியுள்ளார்.
மேலும் இவர் ஏ.ஆர்.ரகுமான் உடன் இணைந்தும் பணியாற்றியுள்ளார். இவரும் இவரது கணவர் மார்க்கும் சேர்ந்து தான் இந்த முடிவு எடுத்ததாக கூறியுள்ளார். மேலும் அது குறித்த பதிவினை இன்ஸ்டாகிராம்ல் பதிவிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமான் தொடர்ந்து அவரின் அசிஸ்டன்ட் பாடகி மோகினி டே விவாகரத்து ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது மட்டும் அல்லாமல் சந்தேகத்தையும் தூண்டி உள்ளது. இந்த தகவல் தற்போது வைரல் ஆகி வருகிறது.