Site icon

நீரழிவு நோய் குறித்து உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்திய ஏ.ஆர்.ரகுமான்.. வைரலாகும் பதிவுகள்..!

தமிழ் சினிமாவில் ரோஜா என்ற படத்திற்கு இசை அமைத்ததின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கு இசை மீது ஏற்பட்ட ஆர்வம் காரணமாக தன்னுடைய 15 வயதிலேயே பள்ளி படிப்பை நிறுத்தி விட்டு இசைப்பயணத்தை ஆரம்பிக்க தயாராகி விட்டார். தன்னுடைய முதல் படமான ரோஜா படத்திலே இவருடைய பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் அடித்ததால் இவர் முன்னணி இசையமைப்பளரக வலம் வந்தார். இன்றளவும் இவருடைய இசைக்கு பல மடங்கு ரசிகர்கள் அடிமை என்றே சொல்லலாம்.

மேலும் இவர் ரோஜா படத்தினை தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்துவிட்டார். இசைப்புயல் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, மலையலாம் என அணைத்து மொழிகளிலும் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தி வருகிறார். உலகளவில் இவருக்கு ரசிகர்கள் உள்ளனர் என்றே சொல்லலாம். சினிமாவில் அறிமுகம் ஆகி 30 ஆண்டுகளுக்கும் மேல் ஆன பின்னரும் இன்றளவும் இவர் பிஸியான இசையமைப்பாளராக தான் வலம் வருகிறார். மேலும் இவர் இரண்டு ஆஸ்கருக்கு சொந்தமானவர் என்றே சொல்லலாம். மேலும் சமூக அக்கரையில் பங்கு எடுக்கும் இவர் உலக நீரழிவு தினத்தை முன்னிட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு பதிவினை போட்டுள்ளார்.

அதாவது நண்பர்களே, நான் முக்கியமான ஒன்றைப் பற்றி பேச விரும்புகிறேன்- நீரழிவு மற்றும் உங்கள் கண்கள். நீங்கள் நீரழிவு நோயுடன் வாழுகிறீர்கள் என்றால், இது இரத்த சர்க்கரையை நிர்வகிப்பது மட்டும் அல்ல. நீரழிவு நோயானது  நெட்டினோபதிக்கு வழிவகுக்கும் என தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் விழிப்புணவு பதிவினை போட்டுள்ளார். தற்போது இந்த பதிவு வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version