விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அதிகளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பிக் பாஸ் சீசன் 8 விஜய் சேதுபதி தொகுத்து வழங்கிவருகிறார். இதில் போட்டியாளர்களாக தீபக்,அர்னவ்,ரஞ்சித்,ரவீந்தர் சந்திர சேகர், கானா ஜெப்ரி,விஜே விஷால்,நான் முத்துக்குமரன்,சத்யா, அருண் பிரசாத், சௌந்தர்யா நஞ்சுண்டன்,சார்சனா, அன்ஷிதா, சுனிதா, RJ அனந்தி, ஜாக்லின், தர்ஷா குப்தா, பவித்ரா, ஜனனி, என 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும் பிக் பாஸ் தொடங்கிய நாளில் இருந்து வீட்டை பிரித்து வைத்திருப்பதால் ஆண்கள் பெண்கள் அடிக்கடி ,மோதி கொள்கின்றனர்.
மேலும் வைல்ட் கார்டு எண்ட்ரியாக ராயன், சிவகுமார், ராணாவ், வர்ஷினி வெங்கட், ரியா மற்றும் வெங்கட். என 6 பேர் கலந்து கொண்டனர். கடந்த வாரம் குறைந்த வாக்குகளை பெற்று சிவகுமார் வெளியேறினார். இந்நிலையில் இந்த வாரம் டெவில் – ஏஞ்சல் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. அதில் டெவில் ஆக இருப்பவர்கள் ஏஞ்சல்களை கடுப்பேத்த வேண்டும் என்று குப்பையை கொட்டுவது, முட்டையை வீசுவது என மட்டமாக விளையாடி வருகிறார்கள். அது பார்ப்போரை கடுப்பாக வைக்கிறது.
இதனை பற்றி டாப் பாடகர் பிக் பாஸ் ஏ.டி.கே ஒரு பதிவிட்டுள்ளரார். அதில் இவர்கள் விளையாடுவது தப்பு. நானும் முதலில் தெரியாமல் தவறாக தான் விளையாடினேன் எனவும் மேலும் ஏஞ்சல்களை கடுப்பேத்த வேண்டும் என்பதற்காக மட்டமாக விளையாட கூடாது. ஏஞ்சல்களுக்கும் அழுகை கோபம் எல்லாமே வர தான் செய்யும். இதன் நோக்கம் ஏஞ்சல்களின் மிருக குணத்தை வெளியில் கொண்டுவருவது அல்ல. போட்டியாளர்களின் மிருக குணத்தை வெளியில் கொண்டுவருவது தான் என்று பிக் பாஸ் ஏ.டி.கே பதிவிட்டுள்ளார். இவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.