Site icon

BB 8 ல் அர்னவ் அன்சிதா ஜோடி…! சும்மா பட்டய கிளப்புற மாரி அர்னவின் EX மனைவி போட்ட வைரல் பதிவு…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். மேலும் இதில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதில் பிக் பாஸ் வீட்டிற்கு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் செல்லம்மா சீரியலில் நடித்து சர்ச்சை ஜோடிகளான அர்னவ் மற்றும் அன்ஷிதா பிக் பாஸ் வீட்டிற்குள் என்ட்ரி ஆகி இருக்கிறார்கள்.

பிரபல தொலைக்காட்சி ஒன்றில் கேளடி கண்மணி என்ற சீரியல் மூலமாக அறிமுகம் ஆனவர் நடிகை திவ்யா. இவரும் விஜய் டிவி செல்லம்மா சீரியலில் நடித்த அர்னவ் இருவரும் காதலித்து வந்தனர். இந்நிலையில் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். மேலும் இவர்கள் இருவருக்கும் நடுவில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் பிரிந்தனர். திவ்யா கர்ப்பமாக இருக்கும் போது அர்னவ் விட்டுச்சென்றார். மேலும் அர்னவ்க்கும் செல்லம்மா சீரியல் நடிகை அன்ஷிதாக்கும் தொடர்பு இருப்பதாகவும் தன்னை அடித்து துன்புறுத்தி வருவதாகவும் அர்னவ் மீது திவ்யா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த நிலையில் அர்னவ் கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமினில் வெளியில் வந்தார்.

மேலும் திவ்யாக்கு ஒரு பெண் குழந்தை பிறந்த பிறகும் அர்னவ் தன்னுடைய குழந்தையை கூட பார்க்கவரவில்லை என திவ்யா பல பேட்டிகளில் கூறியுள்ளார். இந்நிலையில் அர்னவ் மற்றும் அன்ஷிதா ஜோடியாக பிக் பாஸ் வீட்டிற்க்குள் என்ட்ரி கொடுத்திருப்பது பெரும் சர்ச்சையாகவும் மேலும் கேலியும் கிண்டலுமாக நெட்டிசென்கள் கலாய்த்து வந்தார்கள். இந்நிலையில் நடிகை திவ்யா இதற்க்கு பதிலடி கொடுப்பார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் அவர் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் மாஸ் ஆக மனசிலாயோ பாடலுக்கு நடனம் ஆடி வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் அவர் அனைத்து நல்ல விசயங்களும் ஒரு நாள் முடிவுக்கு வந்து தான் ஆக வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அர்னவ் அன்ஷிதா சர்ச்சை ஜோடிகளுக்கு வெளியில் நெகட்டீவ் விமர்சனங்கள் அதிகளவில் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version