விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் ரவீந்தர் எலிமினேட் ஆனார். இரண்டாவது வாரம் அர்னவ் எலிமினேட் ஆனார். அதை தொடர்ந்து தர்ஷா குப்தா வெளியேறினார் அதை தொடர்ந்து சுனிதா வெளியேறினார்.
அதனை தொடர்ந்து வைல்ட் கார்டு மூலமாக என்ட்ரி கொடுத்த ரியா குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறி உள்ளார். தன்னுடைய எலிமினேஷனை ஏத்து கொள்ள முடியாத ரியா மனம் உடைந்து கண்ணீர் வடித்தார். அவருக்கு ஆறுதல் கூறி விஜய் சேதுபதி அவரை வழியனுப்பி வைத்தார்.
இந்நிலையில் தற்போது அவரின் சம்பளம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது அவர் ஒரு நாளைக்கு ரூ. பத்தாயிரம் சம்பளமாக பெற்றதாகவும் மேலும் அவர் வீட்டில் 14 நாட்கள் மட்டுமே இருந்ததாலும் அவர் மொத்தமாக ரூ.1.40 லட்சம் சம்பளம் பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.