Site icon

பிக் பாஸ் நிகழ்ச்சியில் என்ட்ரி கொடுத்த வனிதா விஜயகுமார்.. போட்டியாளரை வறுத்தெடுத்த வீடியோ இதோ..!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 நடந்துகொண்டிருக்கிறது.தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கினார். மேலும் கமல் இடத்தை இவர் பிடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒரே நாளில் ஒட்டு மொத்த பிக் பாஸ் கூட்டத்தையும் தன் பக்கம் கொண்டுவந்துவிட்டார்.மேலும் இதில் போட்டியாளராக 18 போட்டியாளர்கள் களம் இறங்கினர். இதில் முதல் வாரம் எலிமினேட் ஆக ரவீந்தர் வெளியேறினார். மேலும் இரண்டாம் வாரம் எலிமினேட் ஆக அர்னவ் வெளியேறினார்.

மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்களை வைத்து பிக் பாஸ் 8 Fun Unlimited ஷோ நடந்துகொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை சீரியல் நடிகரும் தொகுப்பாளருமான சபரி நடத்தி கொண்டிருக்கிரார்.இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் எலிமினேட் ஆன ரவீந்தர் முதலில் கலந்து கொண்டார். இப்பொது இரண்டாம் வாரம் எலிமினேட் ஆன அர்னவ் கலந்து உள்ளார்.

அவரிடம் கேள்வியினை எழுப்புவதற்கு பிக் பாஸ் சீசன் 3 ல் கலந்து கொண்ட நடிகை வனிதா விஜயகுமார் என்ட்ரி கொடுத்துள்ளார். மேலும் அர்னவை பார்த்து பல கேள்விகளை எழுப்பி உள்ளார். அது மட்டும் இல்லாமல் நாங்கள் எதிர்பார்த்ததை நீ செய்யவில்லை எனவும் மேடையில் வந்து பேசுகிறாய் வீட்டிற்குள் என்ன செய்தாய் என்றும் கேட்டுள்ளார். மேலும் நானாக இருந்தால் பளார் என்று ஓன்று விட்டுருப்பேன் என்றும் கூறியுள்ளார். இந்த நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது.

Bigg Boss Tamil Season 8 Fun Unlimited | 27th October 2024 - Promo 2
Exit mobile version