Site icon

வாக்கு தவறிய பெண்கள் அணி … பெண்களை வறுத்தெடுத்த முத்து…! வெளியானது BB8 ப்ரெமோ…!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சி சீசன் 8 கடந்த அக்டோபர் 6 ம் தேதி ஆரம்பித்த நிலையில் தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கியுள்ளார். மேலும் இதில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் அதிகம். தினமும் டாஸ்க் என்ற பெயரில் விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி போட்டியாளர்களை கையாளும் விதமே தனித்துவம் வாய்ந்ததாக உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியால் வார இறுதியில் ஒரு போட்டியாளர் எலிமிநேட் செய்யப்படுவார்.

அந்த வகையில் பிக் பாஸ் வீட்டில் முதல் எலிமினேட் போட்டியாளராக ரவீந்தர் எலிமினேட் ஆனார். இந்நிலையில் இரண்டாவது வாரம் எலிமினேட் சர்ச்சை ஜோடிகளில் ஒருவரான அர்னவ் எலிமினேட் செய்யப்பட்டார்.இவ்வாறு விறுவிறுப்பாக செல்லும் இந்த நிகழ்ச்சியில் புதிய ப்ரோமோ ஓன்று தற்போது வெளிவந்துள்ளது. அதாவது ஆண்கள் அணியும் பெண்கள் அணியும் தனித்தனியாக இருப்பதால் யாரும் யார் இருக்கும் இடத்திற்கும் செல்லக்கூடாது.

இந்நிலையில் திடீரென சாச்சனாக்கு உடல் நலம் சரி இல்லாததால் ஆண்கள் அணியினர் பெண்கள் அணியினர் இருக்கும் இடத்திற்கு சென்றுள்ளனர். இதனால் பெண்கள் அணியினர் டாமினேட்டை ரத்து செய்வதாக கூறுகின்றன்ர். இதனால் கோபமடைந்த முத்து உங்களால் வாக்கை காப்பாற்ற முடியவில்லை என்றால் கூறி விடுங்கள் என்று சரமாரியாக பெண்கள் அணியினை தாக்கி பேசியுள்ளார். அதற்க்கான ப்ரோமோ வீடியோ தற்போது வெளிவந்துள்ளது

Bigg Boss Tamil Season 8 | 22nd October 2024 - Promo 2
Exit mobile version