Site icon

BB8 ல் கண்ணீருடன் வெளியேறிய ரியா.. எமோஷனலாக பதிவிட்ட முதல் பதிவு..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி தொடங்கிய  முதல் வாரம் ரவீந்தர் எலிமினேட் ஆனார். இரண்டாவது வாரம் அர்னவ் எலிமினேட் ஆனார். அதை தொடர்ந்து  தர்ஷா குப்தா வெளியேறினார் அதை தொடர்ந்து சுனிதா வெளியேறினார்.

அதனை தொடர்ந்து குறைந்த வாக்குகளை பெற்ற ரியா வெளியேறி உள்ளார். தன்னுடைய எலிமினேஷனை ஏத்து கொள்ள முடியாத ரியா மனம் உடைந்து கண்ணீர் வடித்தார். விஜய் சேதுபதியிடம் பேசும் பொழுதும்அழுது கொணடே இருந்த அவருக்கு ஆறுதல் கூறி  விஜய் சேதுபதி அவரை வழியனுப்பி வைத்தார்.  பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்த ரியா

தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு பதிவினை போட்டுள்ளார். அதாவது தான் உண்மையாக விளையாடினேன் எனவும் எனக்கும் அனைவரும் சப்போர்ட் பண்ணாதது எதனால் என்று தெரியவில்லை எனவும் எமோஷனலாக பேசியுள்ளார். மேலும் இதில் இருந்து என்னால் வெளிவர முடியவில்லை எனவும் கூறியுள்ளார். மேலும் எனக்கு சப்போர்ட் செய்த அனைவருக்கும் நன்றி எனவும் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.

Riya 1st Video After Bigg Boss Eviction | Sadly Welcome by Riya Friends & Family ????
Exit mobile version