விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். அதன் பிறகு வைல்ட் கார்டு என்ட்ரி மூலம் 6 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி தொடங்கிய முதல் வாரம் ரவீந்தர் எலிமினேட் ஆனார். அதை தொடர்ந்து அர்னவ், தர்ஷா குப்தா, சுனிதா, ரியா என பலர் வெளியேறினர். இந்நிலையில் தற்போது வைல்ட் கார்டு மூலமாக என்ட்ரி கொடுத்த சிவகுமார் குறைந்த வாக்குகளை பெற்று வெளியேறி உள்ளார்.
அவர் அதை ஒரு பெரியாவிசியமாக எடுத்து கொள்ளாமல் சகஜமாக வெளியேறினார். வெளியில் கிளம்பும் போது சக போட்டியாளர்களிடம் ஒரு 5 நிமிடம் பேசினார். அதில் நான் உள்ளே வரும் பொழுது தீபக் மிகவும் திமிரு பிடித்தவர் என்று நினைத்தேன் அனால் அவர் அப்படி இல்லை என கூறினார். மேலும் மற்ற போட்டியாளர்களை பற்றி பேசியது எதுவும் ஒளிபரப்பாகவில்லை. இந்நிலையில் சிவகுமாரை வழியனுப்ப சக போட்டியாளர்களும் வாசல் வரை சென்றனர்.
ஆனால் முத்துக்குமரன் மட்டும் வரவில்லை. ஏன் வரவில்லை எதற்க்காக அவர் இவ்வாறு செய்தார் என பல கேள்விகள் எழும்பி உள்ளன. உங்களால் முடியாது என சொல்வாங்க , நம்பாதீங்க.. பின்னாடி பேசுறவங்க எல்லாருக்கும் சொல்லறேன் இங்க இல்ல வாழ்க்கைல சொல்றேன் அப்படினீ அறிவுரை கூறினார். இதனை கேட்ட முத்துக்குமரன் அவரை வழியனுப்ப வராமல் தூரமாக நின்று பார்த்துக்கொண்டிருந்தார். இது தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகிட்டு வருது.