மாடலிங் மீது உள்ள ஆர்வத்தினால் போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டகிராம்ல் பதிவிட்டு அதன் மூலமாக பிரபலம் ஆனவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இவர் முதலில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய செந்தூரபூவே சீரியலில் நடித்தார் இதனை தொடர்ந்து இரட்டை ரோஜா சீரியலில் நடித்தார். அதன் பின்னர் குத் விக் கோமாளி சீசன் 2 ல் கலந்து கொண்டு தன்னுடைய சமையல் திறமையை காண்பித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றர். இந்த நிகழ்ச்சியில் மூலமாக தான் இவர் மிகவும் பிரபலம் ஆனார்.
மேலும் இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது ருத்ரதாண்டவம் என்ற படத்தில் கதநாயகியாக நடித்தார் அதனை தொடர்ந்து சன்னி லியோன் கூட இணைந்து ஓ மை கோஸ்ட் என்ற பேய் படத்தில் நடித்தார். இவருக்கு பெரிதளவில் வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. மேலும் இவர் பிக் பாஸ் சீசன் 8 ல் போட்டியாளராக கலந்து கொண்டார். இதன் மூலமாக மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனார். இந்நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் புயலால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதளவில் பாதிக்கப்பட்டுள்ளது. பல்லாயிரம் குடும்பங்கள் அடிப்படை வசதிகளின்றி போராடி வருகிறார்கள்.
உணவு, தண்ணீர் வசதி கூட இல்லாமல் உள்ளனர். இதனை அறிந்து தர்ஷா குப்தா தன்னுடைய குழுவுடன் நேரில் சென்று பாதிக்கப்பட்ட அவரது தலைமையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரண பொருட்களை வழங்கினார். மேலும் அவர்களின் வேதனைகளையும் பகிர்ந்து கொண்டார். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீண்டும் சீரமைக்கும் முயற்சியில் என்னால் முடிந்த உதவியை செய்வேன் என கூறியுள்ளார். இவரின் இந்த செயலை பார்த்து ரசிகர்கள் பலரும் பாராட்டி வருகிறார்கள். மேலும் இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
pic1
pic2