Site icon

பயணம் குறுகியதாக இருந்தாலும் உண்மையாக இருந்தது.. BB8 வர்ஷினி அறிக்கையுடன் போட்ட முதல் வீடியோ..

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். விறு விறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி தொடங்கிய  முதல் வாரம் ரவீந்தர் எலிமினேட் ஆனார். இரண்டாவது வாரம் அர்னவ் எலிமினேட் ஆனார். அதை தொடர்ந்து  தர்ஷா குப்தா வெளியேறினார் அதை தொடர்ந்து சுனிதா வெளியேறினார். அதை தொடர்ந்து ரியா வெளியேறினார்.

தற்போது இறுதியாக நடந்த எலிமினேஷனில் வைல்ட் கார்டு மூலமாக என்ட்ரி கொடுத்த வர்ஷினி வெளியேறினார். தன்னுடைய எலிமினேஷனை ஏத்து கொண்ட வர்ஷினி வெளியேறும் போது எந்த போட்டியாளர்களையும் குறை சொல்லி பேசவில்லை. அது மட்டும் அல்லாமல் சக போட்டியார்களை ஊக்குவிக்கும் விதமாகவும் மேலும் அவர்களுக்கு வாழ்த்துக்களையும் கூறினார். எலிமினேட் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் நேர்மறையான விமர்சனங்களை மட்டுமே பெற்றுள்ளார்.

இந்நிலையில் பிக் பாஸ்ல் இருந்து வெளியேறிய வர்ஷினி நேற்று அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு வீடியோ மற்றும் அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அதில் அவர் தனக்கு ஆதரவு அளித்த அணைத்து நல் உள்ளங்களுக்கும் நன்றி என கூறியுள்ளார். மேலும் வீடியோவில் பிக் பாஸ் பயணம் மிகவும் நான்காக இருந்தது எனவும் மேலும் பிக் பாஸ் மேடையில் பேச நேரமில்லை எனவும் சொல்லிருந்தார். மேலும் ஆதரவும் அளித்த அனைவருக்கு நன்றி எனவும் மேலும் உங்களால் பிக் பாஸ் வீட்டில் ஒரு வாரம் தப்பித்தேன் எனவும் மேலும்  பயணம் குறுகியதாக இருந்தாலும் உண்மையாக இருந்தது. இவ்வாறு வீடியோ வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version