Site icon

பிக்பாஸில் இதை மட்டும் என்னால் செய்ய முடியாது… விஜய் சேதுபதி குறித்து வெளியாகிய தகவல்கள்…!

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சியான பிக் பாஸ் சீசன் 8 தொகுத்து வழங்குவதற்கு தொகுப்பாளராக களம் இறங்கி உள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. பிக் பாஸ் சீசன் 7 வரை நடிகர் கமலகாசன் தொகுத்த நிலையில் அவர் திடீரென விலகியதால் சீசன் 8 தொகுப்பாளராக விஜய் சேதுபதி களம் இறங்கினார். விஜய் சேதுபதி எப்படி நிகழ்ச்சியினை நடத்துவர் என மக்கள் மனதில் ஒரு சந்தேகம் இருந்த நிலையில் முதல் நாளிலே தூள் கிளம்பிவிட்டார்.


இந்த நிகழ்ச்சி ஆரம்பித்த உடனே அதிரடி என்பது போல 24 மணி நேரத்தில் எலிமினேஷன் உண்டு என கூறினார். அதன் படி மகாராஜா படத்தில் இவருக்கு பெண்ணாக நடித்த சச்சனாவை எலிமினேட் செய்தார். மேலும் கமல் இடத்தை இவர் பிடிப்பாரா என ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தார்கள். அவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஒரே நாளில் ஒட்டு மொத்த பிக் பாஸ் கூட்டத்தையும் தன் பக்கம் கொண்டுவந்துவிட்டார். போக போக பிக் பாஸ் போட்டியாளர்களை பின்னி பெடல் எடுப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.


மேலும் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியை விறுவிறுப்பாக கொண்டு சென்றிருக்கும் விஜய் சேதுபதி குறித்து உத்தேசமான சில தகவல்கள் வெளிவந்துள்ளன. அதாவது பிக் பாஸ் நிகழ்ச்சியின் முக்கியமான ஸ்பான்ஸர்களை மட்டும் தான் கூறுவேன் எனவும் மீதி உள்ள ஸ்பான்ஸர்கள் எதையும் கூறமாட்டேன் எனவும் அவர் கூற மறுப்பதாகவும் மேலும் கூற மறுக்கும் ஸ்பான்ஸர்களில் ரம்மி சர்க்கில் இருப்பதாகவும் அதனாலதான் அவர் அதை கூற மறுப்பதாகவும் நெட்டிசென்கள் கூறிவருகின்றனர். மேலும் கமலகாசன் தொகுத்து வழங்கிய போது ரம்மி சர்க்கில் ஸ்பான்சர்களை கூறியதாகவும் தகவல்கள் வெளிவருகின்றன. மேலும் இந்த தகவல்கள் உத்தேச முறையில் தான் கூறப்படுகிறது. எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை.

Exit mobile version