Site icon

bb8 ல் மாஸ் என்ட்ரி கொடுத்த கணவர்.. நல்ல காலம் உதயமாகி விட்டது என முதல் நாளே உற்சாக பதிவு போட்ட சுஜா வருணி..!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 8 ஆரம்பித்த நிலையில் போட்டியாளர்களாக 18 போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் இந்த நிகழ்ச்சிக்கு என்று பெரிதளவில் ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் முதல் வாரம் ரவீந்தர் எலிமினேட் ஆனார். இரண்டாவது வாரம் அர்னவ் எலிமினேட் ஆனார். அதை தொடர்ந்து தர்ஷா குப்தா வெளியேறினார்.

அதன் பிறகு அன்ஷிதா எலிமினேட் ஆவார் என்ற தகவல் வந்த நிலையில் பிக் பாஸ் கடைசி நொடியில் எலிமினேஷன் இல்லை என கூறிவிட்டார். தற்போது 15 போட்டியாளர்கள் உள்ள நிலையில் மேலும் கடந்த வாரம் வைல்ட் கார்டு என்ட்ரியில் 6 போட்டியாளர்கள் என்ட்ரி கொடுத்துள்ளனர்.அதில் ஒருவர் தான் சிவாஜியின் பேரனான சிவகுமார். இவரது மனைவி சுஜா வருணி ஏற்கனவே பிக் பாஸ் 1 ல் வைல்ட் கார்டு என்ட்ரியில் உள்ளே வந்து தூள் கிளப்பியவர். இந்த நிலையில் தற்போது அவரது கணவர் வந்துள்ளார்.

இவரை உற்ச்சாக படுத்தும் விதமாக அவரது மனைவி ஒரு பதிவினை போட்டுள்ளார். அதாவது அன்புள்ள அத்தான் நல்ல காலம் உதயமாகியது இது உங்களுடைய நேரம் உங்களுடைய மேடை இதை நீங்கள் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும் எனவும் மேலும் உங்களுடைய இந்த பயணத்தில் உங்களுடைய திறமையை வெளிக்கொண்டு வாருங்கள் எனவும் மேலும் உங்களை இந்த உலகத்திற்கு தெரிய வையுங்கள் எனவும் கூறி உள்ளார். மேலும் உங்களுடைய ரசிகர்களுக்காக எதாவது வாக்கு தாருங்கள் எனவும் கூறி உள்ளார்.

Exit mobile version