இன்றைய பாஸ்ட்புட் கலாச்சாரத்தில் உணவே மருந்து என்னும் கலாச்சாரம் மாறி, உணவே விஷம் என்னும் சூழலுக்குள் புகுந்து விட்டோம். இந்த துரித உணவு கலாச்சாரம் தான் இன்று பெருகி இருக்கும் இதயநோய்களுக்கு அச்சாரம். இந்த இதய நோயை ஆரோக்கியமான சில உணவுகளின் மூலமே கட்டுக்குள் வைக்க முடியும்.
அதில் முக்கியமானது வெள்ளை சால்மன் மீன். இதில் உள்ள ஒமேகா கொழுப்பு அமிலங்கள் இதய தசைகளுக்கு வலு கொடுக்கும். இதில் செலினியம் அதிக அளவில் இருப்பதால் இதயவாழ்வுக்கும் பாதுகாப்பு அளிக்கும். இதேபோல் ஈரலும் சாப்பிடலாம். இதில் அதிக அளவில் கொழுப்பு இருந்தாலும், அவை நன்மை செய்யும் கொழுப்புகளே! இது கெட்ட கொழுப்பையும் கரைப்பதால் இதயத்துக்கு ஆரோக்கியமே…
இதேபோல் வால்நட்டில் ஒமேகா அமிலங்கள், விட்டமின் ஈ, நார்ச்சத்து ஆகியவை அதிகம் உள்ளது. இதைச் சாப்பிட்டாலும் இதயம் நலமுடன் இருக்கும். இதேபோல் தினமும் ;பாதாம் பருப்பை ஊற வைத்து சாப்பிட்டால் இதயநோய், சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் ஆகியவையும் வராது.
இதேபோல் உலர் திராட்சையும் சாப்பிடலாம். இதில் பொட்டாசியம் இருப்பதால் ரத்தத்தில் அதிகரிக்கும் சோடியத்தைக் குறைக்கும். இதனால் ரத்த அழுத்தம் குறைவதோடு, இதயநோயும் வராது. இதேபோல் உணவில் சிவப்பு பீன்ஸை சேர்த்துக் கொள்வதும் இதயபாதுகாப்புக்கு வழிவகுக்கும்.
இதேபோல் ஓட்ஸ் கொழுப்பைக் குறைக்கும் உணவுகளில் முக்கியமானது. உடம்பை மெல்லியதாக மெயிண்டைய்ன் செய்யவும், இதயநோயில் இருந்து காத்துக் கொள்ளவும் காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடலாம். இந்த உணவுமுறைகளை எல்லாம் பின்பற்றினாலே இதயநோயை அண்டவிடாமல் செய்து விடலாம்.