Site icon

என்ன புடிக்க முடியாது டோய்.. கடல் அலையில் குழந்தையைப் போல் விளையாடிய பறவைகள்..

வானத்தில் கூட்டமாக பறவைகள் பறப்பதைப் பார்க்கவே ரொம்ப, ரொம்ப அழகாக இருக்கும். அதிலும் பறவைகள் கடற்கரையில் அலையோடு விளையாடிக் கொண்டிருந்தால் பார்க்க எவ்வளவு ரம்மியமாக இருக்கும்? அப்படியான ஒரு விசயம் தான் இது! இதுகுறித்துத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பறவைகள் மட்டும் இல்லாவிட்டால் இந்த உலகம் இவ்வளவு இயற்கை வளங்கள் நிறைந்ததாக இருந்திருக்காது. எப்படி என்கிறீர்களா? காகம் தொடங்கி சகல பறவைகளும் சாப்பிட்டுவிட்டு எச்சம் போடுகிறது அல்லவா? பறவைகள் வெறுமனே நாம் வைக்கும் உணவுகளை மட்டுமே சாப்பிடுவது இல்லை.

அவை மரங்களில் பழங்களையும் சாப்பிடும். அவை எச்சம் போடும் போது அந்த பறவைகளின் எச்சத்தில் விதைகளும் இருக்கும். அதன் மூலம் மரம், செடி கொடிகள் வளர்ந்து இந்த உலகம் இயற்கை சமநிலை அடைய பறவைகளும் காரணம் ஆகிறது. மனிதர்கள் தங்கள் வீட்டைக் கட்டிக்கொள்ள பெரிய, பெரிய சிவில் இஞ்சினியர்களை அழைத்து வருவார்கள். மாதக்கணக்கில் பத்து, பதினைந்து பேர் வேலை செய்துதான் ஒரு வீடு உயிர் பெறுகிறது. ஆனால் பறவைகள் தனித்தே தங்கள் வீட்டை அதாங்க கூட்டை அழகாக வடிவமைத்துவிடும். அதிலும், பெரிய, பெரிய இஞ்சினியர்களே நினைத்தால் அப்படி கட்ட முடியாத அளவுக்கு மிக நுட்பமாக தங்கள் கூட்டை வடிவமைத்துக்கொள்ளும் பறவைகளும் இருக்கின்றன.

இங்கே கடற்கரையில் வேகமாக அலையடித்துக் கொண்டிருக்கிறது. பறவைக்கூட்டம் ஒன்று அந்த அலையில் உற்சாகமாக விளையாடிக் கொண்டிருக்கிறது. அலை உள்ளே செல்லும்போது வேகமாக கடலை நோக்கி குடு, குடுவென ஓடும் இந்த பறவைகள், அலை மீண்டும் கரையை நோக்கி வரும் போது தான் நனைந்து விடாதபடி குடு, குடுவென ஓடிவருகிறது. பார்க்கவே ஒரு குழந்தையைப் போல் உற்சாகமாக இவை ஓடிவரும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை ஐ.ஏ.எஸ் அதிகாரி எம்.வி.ராவ் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்தக் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Exit mobile version