இன்றெல்லாம் லேசாக காய்ச்சல், தலைவலி வந்தால்கூட நாம் அலோபதி மருத்துவரைத்தேடி தான் ஓடுகிறோம். ஆனால், நம் முன்னோர்கள் அத்தனைக்கும் வீட்டிலேயே வைத்தியக் குறிப்புகளை வைத்திருந்தார்கள். அதில் முக்கியமானது கலோஞ்சி எனப்படும் கருஞ்சீரகம்.
இந்த கருஞ்சீரகத்துக்கு சர்க்கரை நோய் முதல் புற்றுநோய் வரை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. உலர்ந்த, அல்லது லேசாக வறுத்த கருஞ்சீரகத்தை பொடி செய்து வைத்துக்கொள்ள வேண்டும். இதை நாம் வீட்டில் பயன்படுத்தும் காய்கறிகள், கூட்டு, பொறியலில் தூவி பயன்படுத்தலாம். இந்த கருஞ்சீரகத்தில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடண்ட்கள் உள்ளது. இது நம் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டிராலைக் குறைக்கிறது.
இப்போதெல்லாம் கருஞ்சீரக எண்ணெய்களும் நாட்டு மருந்து கிடைகளில் கிடைக்கிறது. இவை பொடியை விட அதிக நன்மை செய்பவை. கருஞ்சீரகம், அனைத்து வகை புற்றுநோய் செல்களையும் அழிக்கும் ஆற்றல் கொண்டது. உடல் எடை குறைப்பிலும் கருஞ்சீரகம் முக்கியப்பங்கு வகிக்கிறது. கருஞ்சீரகத்தை ஒரு பாத்திரத்தில் போட்டு பொடி செய்து வைச்சுக்கணும். இதை தினமும் காலையில் ஒரு ஸ்பூன் சாப்பிடலாம். அல்லது மிதமான சூட்டில் தண்ணீரில் குடித்தாலும் விர்ரென்று உடல் எடை குறையும்.
ரத்தச்சர்க்கரையின் அளவையும் கருஞ்சீரகம் கட்டுக்குள் வைக்கிறது. அஜீரணக்கோளாறு, உடல் எடை அதிகரிப்பையும் இது தடுக்கிறது. கல்லீரலையும் இது சுத்தம் செய்கிறது. ரொம்ப பெரிய பணச்செலவு எதுவும் இல்லாத இந்த கருஞ்சீரகத்தை தினசரி சாப்பிட்டு நம் உடலை நோய்களில் இருந்து காக்கலாமே…