முன்பெல்லாம் வயோதிகர்களுக்கு மட்டுமே இருந்த நரைமுடி இன்றைய பதின் பருவத்தினரையும் தாக்கத் துவங்கி விட்டது. நரைமுடி வந்தவர்கள் எல்லாம் உடனே டை உள்ளிட்ட வேதிப்பொருள்களை தேடி ஓடுவது வாடிக்கையாகி விட்டது. ஆனால் ஆயுர்வேதத்தில் இதற்கு மிக எளிமையாக தீர்வு காண முடியும். அதுவும் இயற்கையாகவே கிடைக்கும் மூலப்பொருள்களை வைத்தே!
அதுகுறித்து முழுமையாகத் தெரிந்துகொள்ள மேலே படியுங்கள். இதற்கு 2 கப் தண்ணீரும், ரோஸ்மேரி 5 டேபிள் ஸ்பூனும், கற்பூரவல்லி 5 டேபிள் ஸ்பூனும் கட்டுமே போதும். முதலில் தண்ணீரை நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும். நீர் கொதித்து வரும்போது, ரோஸ்மேரி இலை மற்றும் கற்பூரவல்லி இலைகளை போட வேண்டும். 2 நிமிடங்களில் நன்றாக கொதிவந்த பின்னர் அடுப்பை அணைக்க வேண்டும். இந்த நீரை 2 முதல் 3 மணிநேரங்களுக்கு அப்படியே விட்டுவிட வேண்டும்.
இந்த தண்ணீரை உங்கள் தலைமுடி முழுவதும் தடவ வேண்டும். 2 மணி நேரம் கழித்து விருப்பப்பட்டால் தலைக்கு குளித்தால் போதும். இதை வாரத்துக்கு மூன்று முறை பயன்படுத்தினாலே நல்ல பலன் கிடைக்கும். இது முடி உதிர்வுக்கும் நல்ல தீர்வாக இருக்கும்.
இதேபோல் வால்நட் இலைகளும் நல்ல பலனைக் கொடுக்கும். பொதுவாக இந்த இலைகள் அழகு சாதனத் துறையில் டை, ஷாம்பூ தயாரிக்க பயன்படும். இந்த இலையில் ஜக்லோன் என்னும் மூலப்பொருள் உள்ளது. இது டையாக பயன்படுகிறது. இதற்கு முதலில் தண்ணீரை கொதிக்க வைக்க வேண்டும். அதன் பின்னர் வால்நட் இலைகளை போட வேண்டும்இதை 3 நிமிடங்களுக்கு சிம்மில் வைக்க வேண்டும். பின்னர் அடுப்பை அணைத்துவிட்டு 4 மணி நேரங்களுக்கு அப்படியே மூடி வைக்க வேண்டும். அதன் பின்னர் இந்த நீரை வடிகட்டி எடுத்து இந்த நீரைமுடி முழுமைக்கும் தடவலாம். அதில் இருந்து இரண்டு மணி நேரம் கழித்து குளித்தால் நல்ல பலன் கிடைக்கும். இதை தினசரி கூட பயன்படுத்தலாம்.
இதேபோல் காபித்தூள், எழுமிச்சை சாறு கலவையும் நல்ல பலன் கொடுக்கும். நீரை நன்கு கொதிக்க வைத்து அதில் காபிப்பொடியைப் போட்டு திக்கான டிக்காஷென் தயாரித்துக்கொள்ள வேண்டும். சூடு ஆறிய பின்னர் அதில் எழுமிச்சைச் சாறை சேர்க்க வேண்டும். இதை இப்போது வடிகட்டி உங்கள் தலையில் வாரம் மூன்று முறை தேய்த்து, இரண்டு மணி நேரம் கழித்து குளித்துவர நரைமுடி போகும்.
இதேபோல் நீருல் கருவேப்பிலைகளைப் போட்டு நன்கு கொதிக்க வைத்தும் இம்முறையில் பயன்படுத்தலாம். இதையெல்லாம் செய்து பாருங்க உங்க நரைமுடியும் கருப்பாக மாறத் துவங்கி இருக்கும்.