Site icon

உடலில் தேவையின்றி தங்கும் அதிகப்படியான உப்பை வெளியேற்றும் உணவு வகைகள் இவைகள் தான்.!

நாம் சாப்பிடும் உணவின் சுவையை தீர்மானிக்கும் முக்கிய பொருள் தான் உப்பு. ஆனால் மருத்துவர்கள், அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படும் உப்பினால்தான், ஆரோக்கிய பிரச்சனைகளை அடிக்கடி சந்திக்க வேண்டி வரும் என கூறுகின்றனர்.

நம் உடலில் ஏற்படும் திரவ அளவை கட்டுப்படுத்த நமக்கு சிறிதளவு உப்பே போதும்.அதிகமான உப்பு பயன்படுத்தினால் , ரத்த நாளங்களில் தண்ணீர் தேக்கமடைந்து இரத்த அழுத்தம் உருவாகின்றது. இதனால் தான் டென்ஷன், தலைவலி,உடல் பருமன்ம் இருதயநோய் போன்றவை சுலமாக ஆட்கொண்டுவிடுகின்றது.

இங்கு நம் உடலில் தங்கும் அதிகப்படியான உப்பினை வெளியேற்ற உதவும் உணவு பொருட்கள் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை நம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தினாலே நாம் ஆரோக்கியமாக வாழலாம்.

பீன்ஸ்

புரோட்டீன் அதிகம் உள்ள உணவுகளை சேர்த்து வந்தால், உடலில் இருந்து உப்புச்சத்தின் அளவு நன்கு குறையும். எனவே உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள் தங்கள் உணவில் புரோட்டீன் நிறைந்துள்ள உணவுகளைச் சேர்ப்பது நல்லது. பீன்ஸ்ல் அதிகப்படியான புரோட்டீன் உள்ளதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

தயிர்

தயிரில் அதிகப்படியான புரோட்டீன் உள்ளதால், தினமும் உணவில் சேர்த்து வரலாம், இது உடலில் இருந்து அதிகப்படியான உப்பை வெளியேற்றும்.

மீன்

மீனை அடிக்கடி உட்கொண்டு வந்தால், அதில் உடலுக்கு தேவையான பொட்டாசியம் உள்ளது. இதனால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பை குறைக்கும். எனவே சால்மன் மற்றும் சூரை மீனை மட்டும் வாங்கி உண்ணவேண்டும்.

வேகவைத்த உருளைக்கிழங்கு

உருளை கிழங்கு தோலில் அதிகப்படியான பொட்டாசியம் உள்ளதால்,அதனை நன்கு வேகவைத்து சாப்பிட்டுவந்தால் உடலில் உள்ள அதிகப்படியான உப்பினை நீக்கும்.

உலர் திராட்சை

உலர் திராட்சையிலும் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் , இதனை அன்றாடம் சிறிதளவு உட்கொண்டு வந்தால், உடலில் உப்பு சேர்வதைத் தடுக்கலாம்.

மேலும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்கள், உணவில் உப்பு சேர்ப்பதைத் தவிர்த்து கொள்ள வேண்டும். இரத்த அழுத்தம் வரக்கூடாதெனில் உப்பை அதிகமாக உணவில் சேர்க்காமல் இருக்கவும்.

Exit mobile version