கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள் எனச் சொல்லிவிடலாம். குழந்தைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.
குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். அதிலும் பிஞ்சுக்குழந்தைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஒரு பிஞ்சுக்குழந்தையின் புத்திக்கூர்மை அனைவரையும் ஆச்சர்யத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளது.
குறித்த காட்சியில் பஞ்சாபி சிறுவன் ஒருவன் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது ஒரு வீட்டின் கேட்டிற்குள் இருந்து இரண்டுநாய்கள் குரைத்தன. நாய்கள் குரைப்பதை பார்த்த சிறுவன், கேட்டும் பூட்டியிருப்பதைப் பார்த்துவிட்டு அந்த கேட் வாசலில் நின்று பஞ்சாபி நடனத்தை போடுகிறார். சிறுவனை கடிக்கவும் வழியில்லாமல், துரத்தவும் வழியில்லாமல் கேட்டுக்குள்ளேயே நின்றுகொண்டு அந்த சிறுவனின் நடனத்துக்கு ஏற்ப அந்த நாயும் குதித்து, குதித்து குரைப்பது ‘நாய் டான்ஸ்’ ஆடுவது போல் இருக்கிறது. இந்தக்காட்சி இணையத்தில் வைரல் ஆகிவருகிறது.