நொறுங்கத் தின்றால் நூறு வயது என்பது கிராமப் பகுதிகளில் சொல்லப்படும் பழமொழி. உணவில் நாம் சரியாக கவனம் வைத்தாலே எந்த நோயும் அண்டாது. ஆனால் உணவு பல நேரங்களில் மருந்தாகவும், சில நேரங்களில் நம் உயிருக்கே உலையாகவும் மாறிவிடும்.
இது ஒரு எட்டு வயது சிறுமியின் வாழ்வில் நடந்த நிஜம். ஒருவகையில் நமக்கான எச்சரிக்கை. அந்த சிறுமி அடிக்கடி தலைவலியால் துடித்து வந்தாள். வழக்கமான மாத்திரைகளுக்கெல்லாம் அந்த தலைவலி நிற்கவில்லை. ஸ்கேன் செய்து பார்த்ததில் மூளையில் வீக்கம் இருந்தது தெரியவந்தது. இந்த வீக்கத்தைக் குறைக்க ஸ்டீராய்டு மருந்துகள் கொடுக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து சாப்பிட்டார் சிறுமி. திடீரென எட்டே வயதான அந்த சிறுமியின் உடல் எடை 60 கிலோ வரைப் போக, அவளுக்கு நடப்பதே சவாலானது. மூச்சுவிடவும் சிரமப்பட்டாள்.
தொடர் சிகிட்சையில் அந்த சிறுமிக்கு நியூரோ சிஸ்டிக் சிரோஸிஸ் என்னும் நோய் இருப்பது தெரியவந்தது. பரிசோதனையில் சிறுமியின் மூளைக்குள் நூற்றுக்கணக்கில் வெண்மை நிறபுள்ளி போல் தெரிந்தது. சோதித்துபார்த்ததில் அவை நாடாப்புழுக்களின் முட்டைகள் எனத் தெரியவந்தது. இதே நேரத்தில் சிறுமிக்கு ரத்த அழுத்தமும் ஏற்பட்டுவிட்டது. நாடாப்புளுக்களை கொல்லவும் அவருக்கு மருந்து கொடுக்கப்பட்டது.
இது என்ன தான் பிரச்னை?
இங்கே தான் இந்த விவகாரம் உணவோடு முடிச்சுப் போடப்படுகிறது. அரைகுறையாக சமைத்த உணவு, சுகாதாரமின்மை ஆகியவை நாடாப்புழுக்கள் வயிற்றுக்குள் போக காரணம் ஆகின்றன. அவை ரத்த ஓட்டத்தில் கலந்து உடலின் பல பாகங்களுக்கும் போகிறது. இவை மனிதனுக்கு வலிப்பு நோய் வரவும் காரணம் ஆகிறது. பொதுவாகவே மனித உடலுக்குள் நாடாப்புழுக்கள் இருப்பது யூஸ்வலான விசயமே…ஆனால் அது அதிகமாகும்போது தான் பிரச்னை.
பொதுவாகவே நாடாப்புழுக்கள் உணவை கிரகிப்பதற்காக ஊட்டசத்துக்காக ஒருவரை சார்ந்து இருக்கும். ஆனால் இது அதிகரித்ததால் சிறுமிக்கு வந்த பிரச்னை தான் அது.
எப்படி தீர்ப்பது?
உணவை நன்கு வேகவைத்து சாப்பிட்டாலே இந்த நாடா புழுத் தொல்லையில் இருந்து தப்பி விடலாம். சரியாக வேகவைக்காத முட்டை, ஆப்பாயில், முட்டைக்கோஸ், கீரைகள், மாட்டிறைச்சி, சிக்கன், மட்டன், பன்றி கறி, மீன் இதையெல்லாம் நன்கு வேக வைத்துத்தான் சாப்பிட வேண்டும். இவற்றில் லார்வாக்கள் அதிகம் இருப்பதால் அரைகுறையாக வேக வைத்து சாப்பிட்டால் உங்களுக்கும் தலைவலியில் இருந்து துவங்கி…மேலே இருந்து படியுங்கள் தெரியும்…நமக்கேன் வம்பு? நன்றாக வேகவைத்து உண்போம்.