Site icon

அம்மா… வயிறு வலிக்குது என துடித்த 3 வயது குழந்தை… ஸ்கேன்னை பார்த்து அதிர்ந்து போன டாக்டர்கள்..!

துபாய் நாட்டை சேர்ந்த மூன்று வயது நிரம்பிய குழந்தை ஒன்று கடுமையான வயிற்று வலியால் துடித்துள்ளது. அதனால் இரவில் தூங்கவும் முடியாமல், பகலில் பள்ளிக்கூடம் செல்லவும் முடியாமல் வேதனையில் தவித்தது.

இதைப் பார்த்து மிரண்டுபோன குழந்தையின் பெற்றோர் ஷக் கலிப்பா மெடிக்கல் செண்டர் என்னும் மருத்துவமனையில் சேர்த்தனர். கொஞ்ச நேரத்தில் குழந்தைக்கு மூச்சு விடுவதிலும் சிரமம் ஏற்பட்டது.

அப்போது தான் குழந்தை கையில் வைத்து விளையாடிக் கொண்டிருந்த தங்க மோதிரத்தை காணவில்லை என்பதை பெற்றோர் பார்த்தனர். இதை மருத்துவரிடம் குழந்தையின் பெற்றோர் சொன்னார்கள்.

உடனே மருத்துவர்கள் குழந்தையை ஸ்கேன் செய்து பார்த்தனர். அப்போது குழந்தையின் வயிற்றில் தங்கமோதிரம் கிடந்தது. உடனே மருத்துவர் டேவிட் ரூட் அறுவை சிகிட்சை செய்து குழந்தையின் வயிற்றில் இருந்த தங்க மோதிரத்தை அகற்றினார்.

துபாயில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் இப்படி கையில் வைத்து விளையாடியதை முழுங்கியதாக 256 குழந்தைகளுக்கு ஆப்ரேசன் செய்யப்பட்டு இருக்கிறது.

உங்கள் பிள்ளைகளும் இனி விளையாடும் போது கையில் என்ன என்ன வைத்திருக்கிறார்கள் என ஒரு கண்ணு வைச்சுக்கோங்க!

Exit mobile version