Site icon

வாழ்வில் திரும்பவே கிடைக்காத சொர்க்கம் இது தான்… இத பாருங்க அப்புறம் நீங்களே இதைச் சொல்லுவீங்க..!

வாழ்க்கையில் சில விசயங்கள் நமக்குத் திரும்பவே கிடைக்காது. அதில் மிக முக்கியமானது குழந்தைப் பருவம். அந்த பருவமே மிகவும் குதூகலமானது. அப்போது நாம் அந்த சந்தோசத்தை உணர்ந்துகொள்ள காலம் வாய்ப்புத்தராது. விறு,விறுவென வளர்ந்து விடுகிறோம். அதில் இருந்து நாம் திரும்பிப்பார்த்தால் குழந்தைப் பருவத்தைத் தவற விட்டிருப்போம்.

அதிலும் குழந்தைப் பருவத்த்தில் நாம் அனுபவிக்கும் சந்தோசத்தைவிட குழந்தைகளை பார்த்துக் கொண்டிருப்பவர்கள் அதிக மகிழ்ச்சியடைவார்கள். குழந்தைகள் சின்னதாக ஏதாவது செய்தாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நமக்கு அது பேரானந்தமாக மாறிவிடுகிறது. கள்ளம், கபடமற்ற குழந்தைகளின் செய்கைக்கு முன்னால் இந்த உலகில் எதுவுமே பெரிய விசயம் இல்லை ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என வள்ளுவரும் பாடுகிறார்

குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். இங்கேயும் அப்படித்தான்…குழந்தைகளே அழகு. அதிலும் அவர்கள் தன்னை மறந்து செய்யும் செயல் பேரழகுதானே? குளிப்பதற்காக இரண்டு குழந்தைகளைத் அவர்களது பெற்றோர் தண்ணீர் நிறைந்த டப்பாவுக்குள் வைக்கின்றனர். அந்தக்குழந்தைகள் டப்பாவுக்குள் இருக்கும் தண்ணீரில் எழுந்து, ஸ்பீடாக உட்கார்ந்து கொண்டே இருக்கின்றன. அப்போது தொட்டிக்குள் அழுத்தத்தில் தண்ணீர் வெளியேற அதைப் பார்த்து குலுங்கி, குலுங்கி குழந்தைகள் சிரிக்கின்றனர். வாழ்வில் திரும்பவே கிடைக்காத சொர்க்கம் இதுதான். இதோ நீங்களே பாருங்களேன். லட்சக்கணக்காணோர் பார்த்து வியந்த வீடியோ உங்களுக்காக..

Exit mobile version