செல்போனில் மகள் செய்த ஒரு வேலையால் தந்தை அதிர்ச்சியில் உறைந்து போனார். அந்த சுட்டிக்குழந்தை அப்படி என்ன செய்தது எனத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
குழந்தைகள் தான் இந்த உலகிலேயே கள்ளம் கபடம் இல்லாதவர்கள். அவ்வளவு அன்பினைக் குழந்தைகள் கடத்துவார்கள். அதனால் தான் எவ்வளவு பெரிய துயரமாக இருந்தாலும் குழந்தைகளோடு பொழுதைக் கழிக்கும் போது அந்த சோகம் அப்படியே நம் நெஞ்சை விட்டு மறைந்துவிடும்.
அதேபோல் குழந்தைகள் மிகவும் பாசத்துக்கிரியவர்களாக இருப்பார்கள். அவர்களது அன்பு தூய்மையானதாகவும் எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்டதாகவும் இருக்கும். அதனால் தான் குழந்தைகள் செய்யும் சின்ன செய்கைகள்கூட அவ்வப்போது இணையத்தில் வைரலாகிவிடுகிறது. குழந்தை ஒன்று சீனாவில் தன் தந்தையின் பாக்கெட்டில் இருந்து செல்போனை எடுத்து உணவு ஆர்டர் செய்யக் கேட்டது. தந்தையும் மகளின் ஆசைக்கு அணைபோடக்கூடாது என ஆர்டர் செய்யட்டும் என மொபைலைக் கொடுத்துவிட்டார்.
மகளும் அவளுக்குப் பிடிக்கும் என நூடுல்ஸ் ஆர்டர் செய்துள்ளார். அப்பாவும் நூடுல்ஸ் வரும் என மகளுடன் காத்திருந்தார். அப்போது ஒரு வேன் நிறைய நூடுல்ஸ் கொண்டு வந்துள்ளனர். கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய்க்கு நூடுல்ஸ் வீட்டுக்கு வந்துள்ளது. குழந்தை ஒன்று என டைப் செய்வதற்குப் பதிலாக 100 என ஆர்டர் கொடுத்துவிட்டது, நிறுவனத்துக்கோ குழந்தை ஆர்டர் செய்தது தெரியாமல் டெலிவரி கொண்டு வந்துவிட்டனர்.
அப்பாவுக்கோ வேறு வழியில்லாமல் தன் வீட்டுக்கு 8 பார்சல்களை எடுத்துவிட்டு மிச்சத்தை ஏழை குழந்தைகளுக்கு தன் டீவீலரில் போய்க் கொடுத்திருக்கிறார். பிள்ளையின் ஆசைக்காக 15 ஆயிரம் ரூபாய்க்கு நூடூல்ஸ் வாங்கிய சம்பவம் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.