தமிழ்த்திரையுலகில் வில்லனாக அறிமுகமாகி, தொடர்ந்து கதாநாயகன் ஆனவர் சத்யராஜ். தனக்கென தனி ஸ்டைலை உருவாக்கி 40 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் தாக்குப் பிடிக்கிறார். இவரது மகன் சிபிராஜ் ஸ்டூண்ட் நம்பர் 1 படத்தின் மூலம் அறிமுகமானார். ஜோர், கோவை பிரதர்ஸ் என அப்பா_மகன் கூட்டணியில் தொடர்ச்சியாய் படம் வந்தாலும் சிபிராஜால் பெரிய ரசிகர் கூட்டத்தில் செல்ல முடியவில்லை.
சிறிய இடைவெளிக்கு பின்பு நல்ல கதையம்சம் கொண்ட படங்களை மட்டும் தேர்ந்தெடுத்து நடிக்கத் துவங்கினார் சிபிராஜ். நாய்கள் ஜாக்கிரதை உள்ளிட்ட சில படங்கள் அதனால் நன்றாகப் போனது. சிபிராஜ்க்கு தீரன் என்ற மகன் உள்ளார். அதேபோல் தமிழ்த் திரைப்படங்களில் சத்யராஜ்_கவுண்டமணி சேர்ந்து நடித்தப் படங்கள் எல்லாம் வேற லெவலில் ஹிட் அடித்தது. இந்தக் கூட்டணி மிகவும் வெற்றிகரமான கூட்டணியாக இருந்தது. கவுண்டமணிக்கு ஏராளமான ரசிகர்கள் படை இப்போதும் உண்டு.
இப்போது கவுண்டமணி சத்யராஜின் மனைவி, மகன் சிபிராஜ், மகள் ஆகியோரோடு 90 களில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் இப்போது வைரலாகி வருகிறது. அதைப் பார்த்த ரசிகர்கள் அடடே சிபிராஜ்ஜா இது? சின்ன வயசுல இப்படி பப்ளிமாஸ் மாதிரி பொத்து, பொத்துன்னு இருந்துருக்காரே என கமெண்ட் செய்துவருகின்றனர்.