தமிழ் சினிமாவில் என்னவளே என்ற படத்தின் மூலமாக அறிமுகம் ஆனவர் தான் நடிகை சினேகா. இவர் அதனை தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். இவருக்கு என்று ரசிகர்கள் அதிகம். புன்னகை அரசியாக இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் வாழ்ந்து வருகிறார். இவர் இறுதியாக இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக கோட் படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இந்த படம் வசூலிலும் சாதனை படைத்தது.
நடிகை சினேகாவும் நடிகர் பிரசன்னாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் ஒரு பெண் குழந்தையும் உள்ளது. மேலும் பிரசன்ன தற்போது அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். மேலும் சினேகா ஸ்நேகலாய என்ற பெயரில் புடவை கடையை பிரபலப்படுத்துவதில் அதிகளவில் ஈடுபட்டு வருகிறார். மேலும் இவர்கள் தங்களது ஆடை கடையின் ஆடைகளை கர்நாடக கலைஞ்சர்களுக்கு கொடுத்து ரேம்ப் வாக் நிகழ்ச்சியை நடத்தியுள்ளார்.
இந்நிலையில் பத்திரிக்கையாளர்களை சந்தித்த சினேகா மற்றும் ப்ரசன்னாவிடம் பிரபலங்களின் விவாகரத்து குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்க்கு தனிப்பட்ட வாழ்க்கையில் நடப்பதை தடுக்க அறிவுரையெல்லாம் சொல்ல முடியாதுங்க. எல்லாருக்கும் ஒவ்வொரு கருத்து இருக்கும் அதை நாம் மதிக்க வேண்டும் என்று கூறியுள்ளனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.