திருமணப் புகைப்படம் எடுக்கும் கேமராமேன்கள் தங்கள் தனித்திறமையை காட்டும் வகையில், திருமண சடங்குகள், மண்டப நிகழ்வுகளைக் கடந்து வெளியே ‘அவுட்டிங்’ படங்களையும் இப்போது அதிக அளவில் எடுக்கின்றனர். வழக்கமான திருமண படங்களோடு, இந்த அவுட்டிங் படங்களும், அப்போது எடுக்கப்பட்ட வீடியோவும் சேரும் போது கல்யாண ஆல்பமே கிளாஸிக்காக இருக்கும் என்பதாலேயே இப்படி செய்கின்றனர்.
இப்போதெல்லாம் திருமண ஆர்டர்கள் எடுக்கும் கேமராமேன்கள், சினிமா ஒளிப்பதிவாளரையே மிஞ்சி சிந்திக்கின்றனர். அண்மையில் கேரளத்தில் மரத்தில் இருந்து தலைகீழாகத் தொங்கி ஒரு போட்டோகிராபர் மணமக்களை போட்டோ சூட் செய்யும் படம் இணையத்தில் வைரலானது. சகதியில் இருந்து புரளும் ஜோடி, கேரளத்தில் கட்டிட வேலை செய்வது போல் சூட் செய்யப்பட்ட ஜோடி என போஸ் வெட்டிங் சூட்டாலேயே பேமஸான பல ஜோடிகள் உண்டு.
போஸ்ட் வெட்டிங்கில் திரைப்பட சூட்டிற்கு இணையாக இப்போது செம கெத்து காட்டுகின்றனர். இங்கேயும் ஒரு ஜோடி செல்லம்மா பாடலுக்கு போஸ்ட் வெட்டிங்கில் முழு பாடலுக்கும் நடனமாடி பட்டையைக் கிளப்புகின்றனர். இந்தப் பாடலுக்கு வித, விதமான காஸ்ட்யூம், அழகான லொக்கேசன் என அசத்துகின்றனர். செம அழகாக சினிமா ஹீரோயின் போலவே இருக்கும் மணமகள் ஆட்டத்தில் பட்டையைக் கிளப்புகிறார். இதோ நீங்களே வீடியோ பாருங்க…