வடகிழக்கு பருவ மழை தொடங்கிய நிலையில் வங்க கடலில் உருவாகி உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கன மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது . மேலும் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய கூடும் எனவும் எதிர் பார்க்கப்படுவதாக கூறி இருந்தது.இந்நிலையில் உருவாகிய காற்றழுத்த தாழ்வு பகுதி வலப்பெற்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக சென்னை அருகே கரையை கடக்கும் எனவும் தகவல்கள் வந்தன .
இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் ஆரம்பமாக சென்னை உள்ளிட்ட பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் மிக கன மழை பெய்ய கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதனால் சென்னை செங்கல்பட்டு திருவள்ளூர் காஞ்சிபுரம் போன்ற மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் மக்களும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுள்ளது.
இந்நிலையில் நேற்று கனமழை பெய்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் சில இடங்களில் வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் தங்களுடைய வீடுகளை விட்டும் வெளியேறும் நிலைமையும் ஏற்பட்டு இருப்பதால் 2 நாட்களுக்கு அம்மா உணவகத்தில் மக்கள் உணவு சாப்பிடுவதற்கு இலவசம் என முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள்.