Site icon

மஞ்சள் வீரனாக நடிக்க இருக்கும் கூல் சுரேஷ்…. இவருக்கு இரண்டு கதாநாயகியாம்…

பைக் ரைடிங் பைக் வீலிங் சாகசங்கள் செய்து அதனை வீடியோ எடுத்து அது ட்ரெண்ட் ஆக வேண்டும் என்பதற்காக அதனை தன்னுடைய யு டுப் சேனல்லில் போட்டு பேமஸ் ஆனவர் தான் டிடி எப் வாசன். இவர் பிரபலன்களான ஜி பி முத்து, ரவினா தாகா, அவர்களை வைத்தும் பைக்கில் சாகசங்கள் காட்டியுள்ளார். அந்த விடீயோக்களும் இணையத்தில் வைரல் ஆகி வந்துள்ளன. மேலும் இவர் காட்டும் பைக் சாகசங்களால் இவருக்கு அடிபட்டு கை கால் முகம் போன்ற இடங்களில் கெட்டு போட்டதும் உண்டு. மேலும் இவர் விதிமுறைக்கு வழக்கமாக சாகசம் செய்து அவர் மீது வழக்கு பதிவாகி போலீசாரால் கைது செய்யப்பட்டு பல சர்சைகளிலும் மாட்டிக்கொண்டுள்ளார்.

இவ்வாறு யூ டுப் பிரபலம் என்ற வகையில் இயக்குனர் செல்லம் இயக்கத்தில் மஞ்சள் வீரன் என்ற படத்தில் கதாநாயகராக களம் இறங்கினார். அதே சமயம் வாசன் படம் நடிப்பதற்கு முறையாக ஒத்துழைப்பு தரவில்லை அதனால் அவரை படத்தில் இருந்து நீக்குகிறோம் எனவும் இயக்குனர் செல்வம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இயக்குனருக்கும் வாசனுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது வாக்குவாதம் முற்றிய நிலையில் இயக்குனர் செல்வம் வாசன் ஆம்பளையாக இருந்தால் வர சொல்லுங்கள் பேசலாம் எனவும் சவால் விட்டிருந்தார் .


இந்நிலையில் மஞ்சள் வீரன் படத்தில் டி டி எப் வாசனுக்கு பதிலாக பிக் பாஸ் பிரபலமும் காமடி நடிகருமான கூல் சுரேஷ் நடிக்க இருக்கிறார். அவருக்கு ஜோடியாக இரண்டு நடிகைகள் நடிக்க இருக்கிறனர். இந்த படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. மேலும் இது தொடர்பாக சுரேஷ் பேட்டியளித்துள்ளார். மேலும் இது தொடர்பான போட் டோஸ்கள் மற்றும் வீடியோஸ்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version