குழந்தைகள் எதைச் செய்தாலும் அழகுதான். வீட்டில் குழந்தைகள் இருந்தால் நமக்கும் நேரம் போவதே தெரியாது. அதிலும் இந்த கொரோனா காலத்தில் வீட்டில் குழந்தைகள் இருந்தவர்களுக்கு மட்டுமே நன்றாக நேரம் போயிருக்கும்.
சின்னக்குழந்தைகள் செய்யும் ஒவ்வொரு செயலும் நம்மை வெகுவாக ரசிக்க வைக்கும். எந்த செயலை குழந்தைகள் செய்தாலும் அது மிகவும் ரசனைக்குரியதாக இருக்கும். இங்கே ஒரு குழந்தை செய்யும் செயல் இணையத்தில் வேற லெவலில் வைரல் ஆகிவருகிறது.
கள்ளம், கபடமே இல்லாதவர்கள் யார் எனக் கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு குழந்தைகள் எனச் சொல்லிவிடலாம். குழந்தைகளின் உலகம் எப்போதுமே குதூகலமானவை. அதனால் தான் ஒரு கூடை நிறைய பூக்கள் பூத்தாலும் அது ஒரு குழந்தையின் சிரிப்புக்கு ஈடே ஆகாது என்பார்கள். அதைத்தான் குழல் இனிது யாழ் இனிது என்பர். தன் மக்களின் மழலைச் சொல்லை கேட்காதவர் என தமிழ்க்கவிஞர்களும் பாடுகிறார்கள்.
குழந்தைகளின் செயல் எத்தனை முறை பார்த்தாலும் போரே அடிக்காதது. குழந்தைகளின் சிரிப்பு, சங்கீதத்தைவிடவும் இனிமையானது. அது அதை உணர்ந்தோருக்கு மட்டுமே தெரியும். அதிலும் பிஞ்சுக்குழந்தைகள் எதை செய்தாலும் ரசித்துக் கொண்டே இருக்கலாம். இங்கே ஒரு பிஞ்சுக்குழந்தையின் செயலும் அப்படித்தான் நம்மை வெகுவாக ஈர்க்கிறது.
ஆம்…குழந்தைக்கு தட்டில் சாப்பாட்டை வைத்துக்கொண்டு கடவுளை பிரார்த்தனை செய்துவிட்டுத்தான் சாப்பிடவேண்டும் என கறார் கண்டிசன் போடுகிறார் தாய். அந்தக்குழந்தையும் கண்களை மூடிக்கொண்டு தன் அம்மாவுடன் சேர்ந்தே பிரார்த்தனை செய்கிறது. ஆனால் வாய் பிராத்தித்துக் கொண்டிருந்தாலும் அந்த கேப்பில் தட்டில் இருக்கும் சாப்பாட்டையும் எடுத்து குழந்தை வாயில் போட்டுக்கொள்கிறது. இந்தக்காட்சியைப் பார்த்தால் சிரிப்பு வருகிறது. இதோ நீங்களே வீடியோவைப் பாருங்களேன்.