நம் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான பருவம் எது எனக் கேட்டால் நாம் குழந்தைப் பருவம் என்றுதான் சொல்வோம். அந்தத் தருணம் மறக்க முடியாத பேரினபம் ஆகும். கள்ளம், கபடம் இல்லாத குழந்தைப் பருவம் தான் நம்மை மிகவும் மகிழ்ச்சியில் வைத்திருக்கும்.
பெரிய வீடு கட்ட வேண்டும், கைநிறைய பணம் சம்பாதிக்க வேண்டும், ஆடம்பரமாகச் செலவு செய்ய வேண்டும் என விருப்பங்கள் எதுவும் இன்றி தேன் மிட்டாயையும், ஆரஞ்சு மிட்டாயையும் பெரிதாக நினைக்கும் வயது அது. அதிலும் வெளியூரில் இருந்து தாத்தாவோ, பாட்டியோ வந்துவிட்டால் இன்னும் சொர்க்கம் ஆகிவிடும் நாள்கள் அவை. அதிலும் தாத்தா, பாட்டி வீட்டிலேயே இருந்து விட்டால் அதுதான் பூலோக சொர்க்கம்.
இதோ இங்கேயும் அப்படித்தான் ஒரு குட்டிப் பாப்பா வீட்டில் தாத்தாவும் இருக்கிறார். தன் பேத்தியை சிரிப்பூட்ட இந்தத் தாத்தாவும் குட்டிக்குழந்தையாகி விடுகிறார். குட்டிக்குழந்தையோ, தன் தாத்தாவுக்கு பவுடர் அடித்துவிட்டு அவரை ஒரு குழந்தையைப் போல் அழகாக்குகிறது. தாத்தாவும் தன் பேத்திக்காக முகத்தை காட்டிக்கொண்டு இருக்கிறார். இந்த அன்புக்கு மேல் உலகத்தில் வேறு என்ன இருக்கிறது? இதோ நீங்களே இதைப் பாருங்களேன்.