குழந்தைகள் துரு துருவென்று ஒரு இடத்தில் விளையாடாமல் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டே இருப்பார்கள். பெரியவர்களுக்கு போதும்….. போதும்…… என்றாகி விடும் இவர்கள் செய்யும் சேட்டைகளால்…….கொஞ்ச நேரம் கண் அசந்துட்டேன் அதற்குள்ளாக இப்படி செய்து விட்டான் என்று பெயர் வாங்காத குழந்தைகள் குறைவு. குழந்தைகளின் குறும்புகள் ரசிக்க வைத்தாலும் சில நேரங்களில் கவன குறைபாடு விபத்துகள் வரை கொண்டு செல்லும்.
குழந்தைகள் தவழ ஆரம்பித்தவுடன் அவர்கள் ஓரிடத்தில் விளையாடாமல் வேறு இடங்களுக்கு நகர்ந்து கொண்டே இருப்பார்கள். தவழ ஆரம்பிப்பதில் இருந்து 5 வயது வரை இவர்கள் மேல் தனி கவனம் செலுத்த வேண்டும். இவர்கள் கைகளுக்கு எட்டும் தூரத்தில் தண்ணீர், நெருப்பு, மருந்து ,மாத்திரைகள், கண்ணாடி பொருட்கள், சூடான உணவு பொருட்கள் போன்றவற்றை அவர்கள் அருகில் இல்லாதவாறும் எட்டும் உயரத்தில் இல்லாதவாரும் பார்த்து கொள்ள வேண்டும். குழந்தைகளுக்கு கொஞ்சம் விவரம் வரும் வரை அவர்கள் இடத்தில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கரணம் தப்பினால் மரணம் என்பது போல் பெரியவர்கள் சற்று கவனம் தப்பினாலும் குழந்தைகள் இன்னலில் மாட்டிக்கொள்வார்கள். சாலையின் அருகில் இருக்கும் வீடுகளில் சிறு கதவை கொண்டு மூடியிருப்பார்கள்….அது போல் மாடி படி கட்டுகள் இருந்தால் அங்கும் பலகை கொண்டு தற்காலிகமாக வழியை அடைத்து வைத்திருப்பார்கள் . இல்லை என்றால் சாலைக்கோ அல்லது மாடி படிகளில் ஏறி சென்று அறியாமையினால் விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
இங்கும் ஒருவர் அம்மாவுக்கு தெரியாமல் மாடிக்கு சென்றதை அம்மா தட்டி கேட்க…..ஆமாம் அப்படி தான் செல்வேன் என்றும் இது என்ன உன்னோட வீடா என்று கேள்வி கேட்க அவரும் ஆமாம்….என்று பதிலுக்கு பதில் உரையாட அவரின் கோபத்தை பார்த்த வலைதளவாசிகள் இவரு பெரிய கோவக்காரரா இருப்பாரோ….என்று செல்லத்துக்கு கோபத்தை பாரு என்று கருத்துக்கள் பதிவிட்டு வருகின்றனர்.அந்த காணொலியை இங்கே காணலாம்