Site icon

அடேங்கப்பா இந்த கிளிக்கு வரும் கோபத்தைப் பாருங்க… கோபத்துலையும் எவுளோ க்யூட்டா பேசுது பாருங்க…

கிளியை பிடிக்காதவர்களே இருக்க முடியாது. அதன் கூர்மையான மூக்கும், அழகும் பார்த்தவுடனே ரசிக்கும்படியாக இருக்கும். அதனால் தான் பெண்களைக் கூட கிளியோடு ஒப்பிட்டுச் சொல்வார்கள். இன்னும் சொன்னால் கல்யாணத்துக்கு வரன் தேடும்போதுகூட பொண்ணு கிளி மாதிரி இருக்கவேண்டும் என சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

நாய், பூனை என ஏராளமான செல்லப்பிராணிகள் இருந்தாலும் அவற்றில் இல்லாத ஒரு தன்மை கிளிகளுக்கு உண்டு. அதுதான் அவற்றின் பேசும் குணம். மிக, மிக அழகாக கிளி பேசுவதால் நாமும் அதைக் கேட்டுக்கொண்டிருந்தால் அழுப்பே தட்டாது. கிளிகளைப் பொறுத்தவரை அவை மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணியாகும்.

இங்கேயும் ஒரு பெண் தன் வீட்டில் பட்டு என்னும் கிளியை வளர்க்கிறார். அந்த கிளி மிகவும் அழகாகப் பேசுவதோடு, அந்த வீட்டில் இருக்கும் அனைவரிடமும் மிகவும் அன்பாகவும் பழகக் கூடியது. அந்தக் கிளி லவ் பேர்ட்ஸ் உடன் சண்டை போட்டிருக்கிறது. இதை அந்தக் கிளியை வளர்க்கும் உரிமையாளர் கண்டிக்கவே, செம கோபத்தில் இருக்கிறது அந்தக் கிளி. இதோ நீங்களே அந்தக் கிளியின் செல்லக் கோபத்தைப் பாருங்களேன். கூடவே செம க்யூட்டாகப் பேசுகிறது அந்த கிளி. இதோ உங்களுக்காக அந்த வீடியோ..

Tinku Cute Angry moment???????????? | Tinku Talking tamil | Tinku whistling #Talkingparrotintamil #pattu||
Exit mobile version