Site icon

இந்த வயதில் இப்படி ஒரு சாதனையா குத் விக் கோமாளி புகழ் மகள் செய்துள்ள சாதனையை பாருங்கள்….!

விஜய் டிவியில் உள்ள நிகழ்ச்சி மூலமாக நடித்து பிரபலம் ஆனவர் தான் புகழ். இவர் விஜய் டிவியில் கலக்க போவது யாரு சிரிப்பு டா நிகழ்ச்சி மூலமாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர். சோகமாக இருக்கும் மனிதர்களையும் சிரிக்கவே தெரியாது என்று இருக்கும் மனிதர்களை கூட தன்னுடைய காமெடியால் சிரிக்க வைக்க கூடிய வல்லமை படைத்தவர் தன்னுடைய காமெடி மூலமாக மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர். இவருக்கென்று ரசிகர்கள் அதிகம். மேலும் இவருக்கு அங்கீகாரம் குடுக்கும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி நிகழ்ச்சி அமைந்தது. அந்த நிகழ்ச்சியில் இவர் கலந்து கொண்ட பின்னர் இவரை அனைவரும் குக் வித் கோமாளி புகழ் என்றே கூறுவர்.

அதன் பிறகு இவருக்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து இவர் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். சிக்ஸர், கைதி, வலிமை போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும் நடிகர் புகழ் 2 வருடங்களுக்கு முன்பு பென்சி ரியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவருக்கு ரித்தன்யா என்ற ஒரு அழகான பெண் குழந்தை உள்ளது. அந்த குழந்தைக்கு சமீபத்தில் முதல் பிறந்த நாளை வெகு விமர்சையாக கொண்டாடினர்.

தற்போது அவர்களது மகள் ரிதன்யா 2 கிலோ அளவில் உடைய டம்பெல்ஸை 17 வினாடிகள் இடை விடாமல் பிடித்து கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இது உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரபூர்வமான அறிவிப்பு இணையத்தில் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த அவரது ரசிகர்கள் குழந்தைக்கு வாழ்த்தை கூறி வருகின்றனர்.

Exit mobile version