தமிழ் சினிமாவில் தெனாலி படத்தை இயக்குனதன் மூலமாக மிகவும் பிரபலம் அடைந்தவர் இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார். இவர் 90 ஸ் காலகட்டத்தில் தொடக்கி இன்று வரை புகழ் பெற்ற இயக்குனராக வலம் வருகிறார். இவர் இயக்குனராக மட்டும் அல்லாமல் நடிப்பதிலும் வல்லவர். பல படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும் முன்னணி நடிகர்கள் வைத்து பல படங்களை இயக்கி உள்ளார்.
இவருடைய படங்கள் என்றாலே வெற்றி படங்கள் என்றே சொல்லலாம். மேலும் இவர் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். இவருடைய படத்தை பார்ப்பதற்கு என்றே ரசிகர்கள் அதிகம். இந்நிலையில் டிசம்பர் 4 ம் தேதி நேற்று இரவு கே.எஸ்.ரவிக்குமாரின் தாயார் ருக்மணி அம்மாள் வயது மூப்பு காரணமாக காலமானார்.
கே.எஸ்.ரவிக்குமாரின் தாயார் மறைவு திரையுலகில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மேலும் அன்னாரின் உடலுக்கு நல்லடக்கம் இன்று மதியம் 2.30 மணியளவில் செய்யப்பட உள்ளது. மேலும் சென்னை சைதாப்பேட்டையில் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.