இது போட்டியும் பொறாமை யும் நிறைந்த உலகம். இங்கு மனித மனங்கள் மதிப்பு இல்லாமல் ஆகிக் கொண்டு இருக்கும் காலம். இப்படியான சூழலில் ஒரு நாயின் உயர்ந்த குணநலன்கள் மனிதர்களுக்கும் முன்னுதாரணமாக மாறி இருக்கிறது.
வெளிநாட்டில் நடந்த இந்த சம்பவம் இப்போது உலக அளவில் வைரலாகி வருகிறது. ஒரு பெண் தன் வீட்டில் வால்டர், கிகோ என் இரு நாய்களை மிகவும் செல்லமாக வளர்த்து வந்தார். இரண்டு நாய்களும் தங்கள் எஜமான் சொன்னால் அதை அப்ப்டியே கேட்கும். இரண்டு நாய்களை ஒரே வீட்டில் வளர்த்து வந்த நிலையிலும் அவை ஒன்றுடன் ஒன்று இதுவரை சண்டை இட்டதே இல்லை.
இப்படியான சூழலில் வால்டர், கிகோ இரண்டுக்கும் உணவைப் போட்டார் எஜமானார். இதில் வால்டர், கிகோவின் உணவையும் சேர்த்து சாப்பிட்டு விட்டது. அப்போது கூட தன் சக தோழலான் வால்டர் நாயிடம் கிகோ கோப்ப்படவில்லை. ஆனால் சாப்பாடு கிடைக்காத அதிருப்தியில் சோர்ந்து போய் படுத்து இருந்தது.
இதனைக் கவனித்த எஜமானார் உடனே வால்டர் நாயிடம், கிகோ சாப்பாடு இல்லாமல் தவிக்கும் தானே அதனிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என சொன்னார். உடனே கிகோவின் பின்னால் போய் அதன் முதுகைப் பற்றி ஏறி நின்று மன்னிப்பு கேட்கத் துவங்கினான் வால்டர்.
உடனே, சரி நீ இப்போது மன்னிப்பு கேட்க தானே இப்படிச் செய்வது என ஓனர் கேட்க, ஆம் என்பதைப் போல் தலையசைப்பு செய்கிறது வால்டர்.
வீடீயோவைப் பாருங்கள்… மனிதர்கள் உணர வேண்டிய வாழ்க்கைப் பாடத்தையும் போதித்து இருக்கிறது இந்த செல்லப் பிராணிகள்!