மிருகங்களிலேயே மிகவும் புத்திசாலி என பெயர் எடுத்தது நாய்கள் தான். அதனால் தான் காவல்துறையிலேயே குற்றங்களை கண்டுபிடிப்பதில் நாய்களை பயன்படுத்துகின்றனர். மோப்பநாய்கள் காவல்துறையில் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
பொதுவாகவே நாய்கள் நன்றி உணர்வுக்கு மிகவும் பிரசித்தி பெற்றவை. நாயை வீட்டுக் காவலுக்கு, வேட்டைக்கு, பாசம் காட்டி வளர்ப்பதற்கு என பலவகையிலும் பயன்படுத்துபவர்களைப் பார்த்திருப்போம். அதனால் தான் பலரும் தங்கள் வீட்டில் நாய் வளர்ப்புக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள்.வீட்டில் வளர்க்கப்படும் நாய்களுக்கு நேரத்திற்கு உணவு கிடைத்துவிடும். தன் எஜமானார் ஒவ்வொரு வேளைக்கும் உணவினை வைத்துவிடுவார். ஆனால் தெருநாய்களுக்கு அப்படி இல்லை.
அவை தனக்கான உணவினை அவைகளே தான் தேடிக் கொள்ள வேண்டும். அதிலும் தெருநாய்கள் குட்டிப்போடிருக்கும் தருணத்தில் உணவு மிக முக்கியமானது. குட்டிகளுக்கு பாலூட்டுவதற்கேனும் அந்த நாய்களுக்கு தெம்பு வேண்டும்.அதற்காக உனவு தாராளமாக கிடைக்க வேண்டும். அதேநேரத்தில் நான்கைந்து குட்டிகளுக்கு மேல் போட்டிருக்கும் தாய் நாயானது, உணவுக்காக வெளியே சென்றால் குட்டிகளுக்கு ஆபத்து வந்துவிடுமோ எனவும் தயங்கும். இப்படியான சூழலில் ஒரு பெண் சாலையோர நாயின் குட்டிகளுக்கு தானே உணவு தயாரித்துவந்து கொடுத்தார். இதைப் பார்த்த தாய் நாய், தன் குட்டிகளுக்கு உணவிடும் அந்தப் பெண்ணைச் சுற்றி, சுற்றி வந்து நன்றி பெருக்கோடு வாலை ஆட்டிக் கொண்டே இருந்தது. இந்தக் காட்சி பார்ப்போரை உருகவைத்தது. இதோ நீங்களே பாருங்கள்…
Dog mom thanks woman for feeding her puppies.🐕🐾🍛❤️ pic.twitter.com/LqwUGfD90o
— 𝕐o̴g̴ (@Yoda4ever) March 8, 2022