Site icon

புதிய தொடரில் நடிக்க இருக்கும் எதிர்நீச்சல் சீரியல் நடிகை மதுமிதா.. வெளியான தகவல்கள்..!

பிரியாத வரம் வேண்டும் என்ற ஜீ தமிழ் தொடர் மூலமாக தமிழ் தொடரில் நடிக்க ஆரம்பித்தவர் தான் நடிகை மதுமிதா. இவர் முதலில் கன்னட மொழி தொடரான ஜெய் ஹனுமான் தொடரில் தான் நடித்தார். அதனை தொடர்ந்து தெலுங்கில் நடித்துள்ளார்.அதனை தொடர்ந்து சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் ஆனஎதிநீச்சல் தொடரில் நடித்தார். இந்த சீரியல்க்கு என்று பெரிதளவில் ரசிகர்கள் கூட்டம் உண்டு.

இந்த சீரியல் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலம் ஆனார்மதுமிதா .    இவருக்கு எதிர்நீச்சல் சீரியல் தான் மிக பெரிய அளவில் திருப்பு முனையாக இருந்தது. மேலும் இந்த சீரியலின் கதை மிகவும் விறுவிறுப்பாக இருக்கும். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க கூடிய கதையாக இந்த சீரியல் கதை இருக்கும். இந்த சீரியல் சமீபதில் முடிவடைந்தது. இதனுடைய இரண்டாம் பாகம் விரைவில் வர உள்ளது இதில் மதுமிதா நடிக்கவில்லை என்று அதனை அவரே உறுதிபடுத்தினார்.

இந்நிலையில் இவர் தற்போது விஜய் தொலைக்காட்சியில்  விரைவில் ஒளிபரப்பாக இருக்கும்  தொடரில் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அந்த தொடருக்கு அய்யனார் துணை என்று பெயர் சூட்டப்பட்டுள்ளதாம். இவரின் நடிப்பை பார்ப்பதற்கு ரசிகர்கள் மிகவும் ஆவலோடு உள்ளனர். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Exit mobile version