பூண்டுக்கு ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இதையெல்லாம் படித்தால் நீங்கள் தினசரி ஒருநேர உணவிலாது பூண்டை சேர்த்துக் கொள்வீர்கள். அல்லது பச்சையாகவேனும் பூண்டை சாப்பிடத் துவங்கி விட்டார்கள்.
பூண்டில் அதிக அளவு தாதுக்களும், வைட்டமின்களும், அயோடிம், சல்பர், குளோரின் சத்து உள்ளது. பூண்டின் வாசத்துக்கும் சல்பர் தான் காரணம். பூண்டுக்கு சளி, இருமலை குணப்படுத்தும் ஆற்றல் உண்டு. பாக்ரீடீரியாக்களை கட்டுப்படுத்தும். சீரண சக்தியைத் தூண்டும். வாயுவை வெளியேற்றும். மலச்சிக்கலைத் தீர்க்கும்.
அதே நேரம் உடலுக்கு உஷ்ணத்தை கொடுக்கும் என்பதால் பூண்டை அளவோடும் எடுத்துக்கொள்ள வேண்டும். பச்சையாகச் சாப்பிட்டால் இன்னும் கூடுதல் பலன் கிடைக்கும். இதயநோயைத் தடுப்பதோடு, நிரையீரல் சம்பந்தப்பட்ட அனைத்து நோய்களுக்கும் அருமருந்தாக இருக்கும். தாய்மார்களுக்கு பூண்டு பால் சுரக்கும் தன்மையையும் அதிகரிக்கும்.
பாலில் பூண்டை வேகவைத்து மஞ்சள் தூள் சேர்த்து குடித்தால் சளி, இருமல் பறந்திடும். என்ன வீட்டு சமையல் கட்டுக்குள் நுழைந்து பூண்டை தேடுகிறீர்களா?