இன்றைய பெண்கள் அதீத திறமையுடையவர்களாக இருக்கிறார்கள். அவர்களின் திறமைகள் வார்த்தைகளால் விவரிக்கவே முடியாதவை. இங்கும் அப்படித்தான் இரு பெண்கள் தங்களின் இசைத் திறமையால் ஒட்டுமொத்த அரங்கையும் கைதட்டு மழையில் நனைய வைத்துவிட்டார்.
கல்யாண வீடு என்றாலே முதலில் மேளக்காரர்களைத்தான் புக் செய்வார்கள். முகூர்த்த நாள்களில் அவர்கள் ஏக பிஸியில் இருப்பதுதான் இதற்குக் காரணம். அதிலும் கெட்டி மேளம்..கெட்டி மேளம் என அய்யர் சொன்னதும், சட..சடவென அடிக்கப்படும் முகூர்த்தக் கொட்டு கேட்கவே அழகாக இருக்கும்.அதேபோல் கோயில் விசேசங்களுக்கும் முதலில் மேளக்கலைஞர்களையே புக் செய்வார்கள். கோயில் விசேசங்களிலுக்கு இசையை ரசிக்க வருபவர்களும் அதிகளவில் உண்டு.
இங்கேயும் அப்படித்தான். ஒரு திருமண விழாவில் மன்னார்குடியை சேர்ந்த சிறுமி பெரிய மிருதங்க கலைஞர்களுக்கு, ஆண்கலைஞர்களுக்கு இணையாக சவால் விடும் வகையில் மிருதங்கம் வாசித்து அசத்துகிறார்.