இந்த உலகம் ஆச்சர்யங்களும், அதிசயங்களும் நிறைந்தது தான். அதிலும் உங்களுக்குத் தொலைந்து போன பொருள்கள் திரும்பக் கிடைப்பதில் பெரிய ஆனந்தம் இருக்கிறது. அதே அப்படி தொலைந்து போன பொருள் திரும்பிக் கிடைக்கும்போது அதில் சில ஆச்சர்யங்களும், அதிசயங்களும் இருந்தால் எப்படி இருக்கும்? இதுவும் அப்படியான ஒரு விசயம் தான்!
இஸ்ரேல் நாட்டில் 1500 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு கப்பல் கடலில் மூழ்கியது. இதில் அண்மையில் ஆய்வு நடந்தது. இதில் இயேசுவின் உருவம் பொறித்த தங்க மோதிரம் ஒன்றும் கிடைத்தது. இஸ்ரேல் நாட்டில் செசேரியா என்னும் பகுதியில் சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு பெரும் புயல்காற்று வீசியது. அப்போது அந்தத்துறைமுகத்தில் நங்கூரம் பாய்ச்சி நிறுத்தப்பட்டிருந்த இரு கப்பல்கள் மூழ்கியது. இந்தக் கப்பலில் தான் இப்போது தொல்பொருள் வல்லுனர்கள் ஆய்வு செய்தனர். இதிலிருந்து, ரோம பேரரசு காலத்தைச் சேர்ந்த வெள்ளி, வெண்கல நாணயமும் கிடைத்தது.
இதேபோல் இயேசுவின் உருவம் பொறிக்கப்பட்ட பச்சைக்கல்லால் ஆன தங்கமோதிரம் ஒன்றும் கிடைத்துள்ளது. அந்த காலத்திலேயே 1500 ஆண்டுகளுக்கு முன்பு இயேசுவின் உருவத்தை தத்ரூபமாக பொறித்துள்ளதாக நெட்டிசன்கள் ஆச்சர்யத்தில் மூழ்கிப் போயுள்ளனர்.
pic1
pic2