பத்து ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு நிகழ்ச்சி மக்களுக்கு அலுப்புத்தட்டாமல் சுவாரஸ்யமாக நகர்த்தப்படுகிறது என்றால் அது ரொம்ப சுவாரஸ்யமான விசயம் தானே? அப்படி ஒரு சுவாரஸ்யம் குறையாத நிகழ்ச்சிதான் நீயா? நானா?
விஜய் டிவியின் எவர்க்ரீன் ஹிட் ஷோக்களில் நீயா, நானாவும் ஒன்று. அதேபோல் இந்த சேனல் நடத்தும் விருதுவிழாக்களையும் கோபிநாத்தான் தொகுத்து வழங்குவார். நாடு முழுவதும் லாக் டவுண் இருப்பதால் பிரபலங்களின் ரசிகர்கள் தங்களுக்குப் பிடித்தவர்களின் புகைப்படங்களைத் தேடி எடுத்து பதிவிட்டு வருகின்றனர். அந்தவகையில் கோபிநாத்தின் விசிறிகள் கொஞ்சம் பின்னோக்கிப் போய் அவரின் கல்யாணப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.
கோபிநாத்தின் மனைவியின் பெயர் துர்கா. பொதுவாக பொதுநிகழ்ச்சிகளில் அதிகம் தலைகாட்டாத துர்கா, சென்னையில் பொட்டிக் ஷாப் வைத்திருக்கிறாராம். அம்மணிக்கு எக்கச்சக்க வாடிக்கையாளர்களும் இருக்கிறார்கள்.