முன்பெல்லாம் நடுத்தர வயதைத் தாண்டியவர்களுக்கு மட்டுமே விழுந்த வலுக்கை இப்போதெல்லாம் வாலிப பருவத்தினரையும் விட்டு வைக்கவில்லை. தினமும் சீப்பால் முடியைக் கோரும் போதும் முடி உதிர்வை பார்ப்பவர்கள் அதிகம். முடி உதிர்வுக்கு இந்த எளிய முறைகளை பின்பற்றினாலே சரி செய்து விடலாம். அவைகள் குறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
புரதச் சத்தானது தலைமுடி வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும் முக்கியமானது. இதனால் தினசரி பால், பட்டாணி, தயிர், கோழி போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். அதேபோல் முட்டையின் மஞ்சள் கரு, மீன், சர்க்கரைவள்ளி கிழங்கு, அவகோடா, ஈஸ்ட், விதைகள் மற்றும் பால் பொருள்களில் பையோடின் நிறைந்துள்ளது. இது முடிவு உதிர்வு பிரச்னையை தடுக்கிறது.
மன அழுத்தமும் முடி உதிர்வுக்கு வழி செய்கிறது. இதனைக் குறைக்க யோகா, தியானம், உடற்பயிற்சி செய்யலாம். குடும்பம், நண்பர்களோடு கூடுதல் நேரத்தை செலவிட்டு மகிழலாம். இதேபோல் ரசாயனம் நிறைந்த தலைமுடி தயாரிப்புகளை நீங்கள் பயன்படுத்துபவர்களாக இருந்தால் இன்றே நிறுத்தி விடுங்கள். இவை பெண்களின் கூந்தல், ஆண்களின் முடி வளர்ச்சியை நிறுத்தி விடும். கூடவே இவை ஒருகட்டத்தில் தலைமுடியில் வறட்சியை ஏற்படுத்தி பொடுகு தொல்லையை அதிகரிக்கும்.
இதற்கு மாற்றாக க்ரீக் யோகர்ட் மற்றும் தேன் அல்லது முட்டையின் மஞ்சள் கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஹேர் மாஸ்காக பயன்படுத்தலாம். இதையெல்லாம் விட ஊச்சத்து குறைபாடு தான் முடி உதிர்வுக்கு முக்கியக் காரணம். அதை சீராக்கினாலே முடி உதிர்வு பிரச்னையை ஊதித் தள்ளிவிடலாம்.