முன்பெல்லாம் நாற்பது வயதைத் தாண்டியவர்களுக்குத் தான் வழுக்கை விழுந்து வந்தது. ஆனால் இப்போதெல்லாம் வாழ்க்கை ஆரம்பிப்பதற்கு முன்னரே வழுக்கை ஆரம்பித்து விடுகிறது.
இந்த வழுக்கையை இளவயதில் மட்டுமல்ல,எந்த வயதிலும் வர விடாமல் தடுக்க சில யுக்திகள் இருக்கிறது. அதுகுறித்து தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.
முன்பெல்லாம் நம் முன்னோர்கள் ஷாம்பு தினமும் பயன்படுத்துவது இல்லை. ஆனால் இன்று டிவியில் விளம்பரப்படங்களைப் பார்த்துவிட்டு தினமும் வித,விதமான ஷேம்பு போட்டு குளிக்கின்றனர். இதனால் தலைமுடியில் வேர்கள் வழு இழந்து போகும். இதனாலும் முடி உதிரும். வாரத்துக்கு இருமுறைக்கு மேல் ஷேம்பு போட்டு குளிக்கக் கூடாது.
ஷேம்புடன் கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். ஆனால் பலரும் அப்படி பயன்படுத்துவது இல்லை. இதனாலும் முடி உதிரும். சிலர் தலைமுடி சார்ந்து எந்த விளம்பரம் வந்தாலும் வாங்கிப் பார்த்து உடனே பயன்படுத்துகின்றனர். இதும் தவறு. ஜெல் தொடங்கி இப்படி பார்ப்பதையெல்லாம் பயன்படுத்துவதால் வேதிப்பொருள்கள் வேர் வரை ஊடுருவி முடிக்கு வேட்டு வைக்கிறது.
இன்னும் சிலர் நீண்டநேரம் தொப்பி போட்டு இருப்பார்கள். இதனால் இயற்கையாகக் கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜன் உங்கள் தலைமுடிக்கு கிடைப்பதை நீங்களே தடுப்பது போன்றது. இதனால் கூட சீக்கிரம் முடி உதிரும். சிலர் வேலைக்குச் செல்லும் அவசரத்தில் தலை குளித்துவிட்டு அந்த ஈரம் காயும் முன்பே, சீப்பை போட்டு தலைமுடியை சீவிவதால் தலைமுடி வேரோடு உடையும் அபாயம் உண்டு.
இதையெல்லாம் செய்யாமல் தவிர்த்தாலே உங்களை வலுக்கை எட்டிக் கூடப் பார்க்காது…இளமையோடு இருங்கள்!