பொதுவாக நாம் மருத்துவத்தை வெளியில் தேடி அலைவதை வழக்கமாக கொண்டு இருக்கிறோம். நம் முன்னோர்கள் மருத்துவத்தை சமையல் அறையில் வைத்து இருந்தனர். அதில் முக்கியமானது சீரகம்.
அகம் என்பது உள்ளே என்பதன் தமிழாக்கம். உடலின் உள்ளே சீராக்கும் பணியை தான் சீரகம் செய்கிறது. வயிற்றுப் பகுதியை சீரமைப்பதில் இதற்கு முக்கியப்பங்கு இருக்கிறது. அதனால் தான் உணவில் செரிமானத்திற்கு சீரகம் சேர்க்கப்படுகிறது.
இந்த சீரகத்தின் நன்மைகளை இனி பார்ப்போம். மஞ்சள் வாழைப் பழத்துடன் கொஞ்சம் சீரகம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை கணிசமான அளவு குறையும். தலைசுற்றல் பிரச்னை இருக்கும் போது கொஞ்சம் சீரகத்தை வாயில் போட்டு மென்று தண்ணீர் குடித்தால் போய்விடும்.
எழுமைச்சை சாறுடன் சீரகக் குடிநீரை சேர்த்துக் குடித்தால் கர்ப்பகால வாந்தியைக் கூட போக வைத்துவிடலாம்.
நாம் தினசரி தண்ணீர் குடிப்பது வழக்கமான ஒன்று. அப்படி குடிக்கும்போது அதனோடு கொஞ்சம் சீரகம் போட்டு சீரகநீராக குடிக்கலாம்.
இதற்கு கர்பப்பை புற்றுநோயைக் கூட கட்டுப்படுத்தும் தன்மை உண்டு. கூடவே இந்த நீர் நம் செரிமானத்தைத் தூண்டி நல்ல பசியையும் உருவாக்கும். ஓமமும், சீரகமும் கலந்த கலவை வாய்க்கும் மருந்தாக இருக்கும். திரிகடுகம் எனச் சொல்லப்படும் சுக்கு, மிளகு, திப்பிலி ஆகியவற்றுடன் சீரகமும் சேர்த்து பொடித்தேனில் கலந்து சாப்பிட்டால் எல்லா உடல் உபாதைகளும் நீங்கும். உடல் சுத்தமாகும்.
பித்தத்தை தெளிய வைத்து குணம் அடையச் செய்வதிலும் சீரகத்துக்கு முக்கியப்பங்கு உண்டு. சீரகத்தை இஞ்சி, எழுமிச்சை பழச்சாறு உடன் கலந்து ஒருநாள் முழுவதும் ஊற வைக்க வேண்டும். இதை தினமும் இருநேரம் வீதம், மூன்று நாள்களுக்கு சாப்பிட்டால் பித்தம் போகும்.
சீரகத்தை சின்ன வெங்காயத்தோடு லேசாக நெய் விட்டு வதக்கி சாப்பிட்டால் உதட்டு புண், வாய் புண் குணமாகும். ஓமத்துடன் கொஞ்சம் சீரகம் சேர்த்து கசாயம் போல் சாப்பிட்டால் வயிற்று போக்கு நிக்கும். மோருடன் சீரகம், உப்பு சேர்த்து சாப்பிட்டால் வாய்வுத் தொல்லை போகும்.
சீரகத்தை லேசாக வறுத்து அதோடு கருப்பட்டி சேர்த்து சாப்பிட நரம்பு சம்பந்தமான நோய்கள் தீரும். எல்லாம் ஒகே…எப்படி பல லட்சத்தை சீரகம் சேர்த்து தரும்ன்னு தோணுதா?
இந்த உலகில் மிகப்பெரிய சொத்து நம் உடல் ஆரோக்கியம் தான். சீரகத்தை மட்டும் நாம் சாப்பிடாமல் இருந்தால் இப்படியான ஒவ்வொரு உடல் உறுப்புக்கும் தனித்தனியே பல ஆயிரம் செலவு செய்து இருப்போம். அதோடு ஒப்பிட்டுப் பாருங்கள்… சீரகம் பல லட்சம் சேமித்துத்தானே கொடுத்து இருக்கிறது?