சாலையில் பாதுகாப்பான பயணத்துக்கு அரசு பலகட்ட ஆலோசனைகளை வழங்கிவருகிறது. ஆனாலும் அதற்கு பலரும் செவிமடுப்பது இல்லை. பாதுகாப்பான பயணத்துக்கு வாகன ஓட்டி மிகவும் சிறப்பானவராக அமைவதும் மிக அவசியம்.
வாகனத்தை ஓட்டுவதற்குத் தகுதியான அளவுக்கு அவர் ஏற்கனவே தூங்கி ஓய்வெடுத்து இருக்க வேண்டும். ஆனால் சில நேரங்களில் அதையெல்லாம் மீறி டிரைவர் பயண களைப்பில் இருப்பார். பேருந்தில் பயணிகள் தூங்கினால் அது வெறுமனே கடந்து போகக் கூடிய செய்திதான். அதுவே ஓட்டுனர் தூங்கிவிட்டால் அது மறுநாள் தலைப்பு செய்தியாகி விடும்.இதெயெல்லாம் தாண்டி சில டிரைவர்கள் வாகனம் ஓட்டுவதைப் பார்த்தால் நம்மையும் அறியாமல் ஆச்சர்யம் மேலிடும்.
இங்கேயும் அப்படித்தான். மலைப்பகுதிகளில் ஆபத்தான சாலைகளில் மிக அதிக பாரம், நீளமான பொருள்களை ஏற்றிக்கொண்டு சர்வசாதாரணமாக சில டிரைவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் வாகனத்தை ஓட்டுவது நம்மை ஆச்சர்யத்தில் விளிம்பிற்கே கொண்டு செல்கிறது. இதோ நீங்களே அந்தக் காட்சியைப் பாருங்களேன்.